பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் வரலாறு படைக்கிறது மழை: நவம்பரில் 105 செ.மீ., தாண்டி கொட்டுகிறது: நூற்றாண்டு சாதனை முறியடிக்கப்படுமா?

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்துள்ளது. அக்டோபர், நவம்பர் மாதத்தில் மட்டும், 124.7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்சமாக, நவ., மாதத்தில் நேற்று மாலை வரை, 105.7 செ.மீ., மழை பெய்துள்ளது. இன்றும் கனமழை பெய்யும் பட்சத்தில், சென்னையில், 1918ம் ஆண்டுக்கு பின் நுாற்றாண்டு சாதனையை முறியடித்து, மழைப்பொழிவின் அளவு புதிய வரலாறு படைக்க

சென்னையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்துள்ளது. அக்டோபர், நவம்பர் மாதத்தில் மட்டும், 124.7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்சமாக, நவ., மாதத்தில் நேற்று மாலை வரை, 105.7 செ.மீ., மழை பெய்துள்ளது. இன்றும் கனமழை பெய்யும் பட்சத்தில், சென்னையில், 1918ம் ஆண்டுக்கு பின் நுாற்றாண்டு சாதனையை முறியடித்து, மழைப்பொழிவின் அளவு புதிய வரலாறு படைக்க வாய்ப்புள்ளது.latest tamil news

தொடர் மழை

காரணமாக, எப்போதும் மழைநீர் தேங்கக்கூடியவையாகவும், அபாயகரமான பகுதியாகவும், 9 இடங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.அத்துடன், அமைந்தகரை பகுதியில், கூவம் கரையோரத்தில் வசித்த, 500 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த மாத இறுதியில் துவங்கியது. ஆரம்பமே அமோகமாக இருந்த பருவமழையால், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பின. இதனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஐந்து நீர் நிலைகளில் இருந்து, அவ்வப்போது உபரி நீர் திறந்து விடப்பட்டது.


அதீத கன மழை

இந்நிலையில், நவ., 6ம் தேதி முதல் தீவிரம் அடைந்த பருவமழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாகின. எப்போதும் இல்லாத வகையில் திடீர் திடீரென சில மணி நேரங்களில் அதீத கனமழை பெய்தது.அந்த வகையில், ஒரே நாளில், 23 செ.மீ., மற்றும் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் 20 செ.மீ.,க்கு மேல் கொட்டித் தீர்த்தது. இதனால், சில தினங்களுக்கு முன், சென்னையில் நவம்பர் மாதத்தில், 100 செ.மீ.,க்கு மேல் மழைப்பொழிவு பதிவானது. இதையடுத்து, சென்னையில், இந்த ஆண்டு மழைப்பொழிவு புதிய வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல், தொடர்ந்து கன மழை பெய்ததால், நேற்று மாலை வரை, 105.7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


latest tamil news


Advertisement

சென்னை மாநகரில், 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 104.9 செ.மீ., மழை பெய்தது. அதன்பின், இந்தாண்டு அக்., மாதத்தில், 21.6 செ.மீ., மழையும், நவ., மாதத்தில், 105.6 செ.மீ., மழையும் பெய்துள்ளது. இதனால், கடந்த, 2015ம் ஆண்டை விட, ஒரே மாதத்தில், அதிகளவில் மழை, இந்தாண்டு பெய்துள்ளது.கடந்த, 2015ம் ஆண்டு, 107.8 செ.மீ., மற்றும் 1918ம் ஆண்டு, 108.8 செ.மீ., மழை ஒரே மாதத்தில் பதிவானது. இந்த மாதம் முடிய, இன்று ஒருநாள் இருப்பதால், இந்தாண்டு நவம்பர் மாதம் அதிகபட்ச மழை பெய்த மாதமாக, வரலாறு படைக்க அதிக வாய்ப்புள்ளது.


குடும்ப வாழ்கை பாதிப்பு


இந்நிலையில், விடாமல் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால், சென்னை மாநகராட்சியில், அக்., 25ம் தேதி முதல் நேற்று மாலை வரை, 1,690 தெருக்களில் மழை நீர் தேங்கியது. இதில், பெரும்பாலான தெருக்களில் இருந்த நீர் அகற்றப்பட்டுள்ளது. தற்போது, 371 தெருக்களில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது. இங்கு, 918 மோட்டார் பம்புகள் வாயிலாக மழை நீரை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.இதை தவிர, 9 இடங்களில், எப்போதும் நீர் தேங்கக்கூடிய அபாயகரமான பகுதியாக மாநகராட்சி அறிவித்துள்ளது.


latest tamil newsஅங்கு, 24 மணி நேரமும் மோட்டார் பம்புகள் வாயிலாக நீர் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும், மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் தலைமையில், தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் அப்பகுதி கொண்டு வரப்பட்டு, மழை நீர் வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் வசிக்கும், ஆயிரக்கனக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news3 வேளை இலவச உணவு


இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:சென்னையில், மழைநீர் தேங்கிய பெரும்பாலான இடங்களில், நீர் வடிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மாம்பலம், தி.நகர் பகுதியில், நீர் வடிய மாற்று வழி ஏற்படுத்தப்பட்டது. இதனால், அதிக கன மழை பெய்தபோதும், கடந்த முறை அளவுக்கு பெரிய அளவில் நீர் தேக்கம் இல்லை. அதேபோல், பல்வேறு இடங்களிலும், மழை நீர் வடிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைக்காக, 3 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களுக்கும், இதுபோல், நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும்.

புறநகர் பகுதிகளில் இருந்து கூவம் ஆற்றில், அதிகளவில் நீர் வரத்து இருக்க கூடும் எச்சரிக்கப்பட்டது. இதனால், அமைந்தகரை, 'ஸ்கைவாக்' பின்புறம் கூவம் கரையோரம் வசித்த, 500 குடும்பங்கள் பாதுகாப்பு கருதி, நேற்று மாலை, மாநகராட்சி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நீர் தேங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி சார்பில், மூன்று வேளை இலவச உணவு, குடிநீர், தங்கும் வசதி போன்றவை ஏற்படுத்தி தரப்படுகிறது. ஒவ்வொரு இடங்களிலும், அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பகுதி மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news
அபாயகரமான பகுதிகள் எவை?

சென்னையில், தி.நகர் பசுல்லா சாலை, மேற்கு மாம்பலம், கே.கே.நகர், அசோக் நகர், ராஜமன்னார் சாலை, சீதம்மாள் நகர், ஜவஹர் நகர், புளியந்தோப்பு, பள்ளிக்கரணை செட்டிநாடு என்கிளேவ் போன்றவை எப்போதும் நீர் தேங்கும் அபாயகரமான பகுதிகளில் பட்டியலில் உள்ளன.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
30-நவ-202116:49:36 IST Report Abuse
Girija விஞ்ஞானிகள் கணிப்புப்படி 2050 -2060 களில் கடல் மட்டம் உயர்ந்து வட சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும். இந்த கணிப்பு 2010 இல் வெளிவந்தது, யாரும் நம்பவில்லை. 2015 இல் வெள்ளம் வந்த பிறகு ஆழ்ந்து ஆராய்ச்சி செய்ததில் 90% சதவிகிதம் சரிதான் என்று சொன்னார்கள். 2021 இல் மீண்டும் வரலாறு காணாத வெள்ளம் இத்தனைக்கும் புயல் இல்லை . சென்னையே பொதுவெளி கழிப்பிடம் போல் ஒருமதமாக உள்ளது. இதை சரி செய்ய முடியாது, அதற்கு இயற்கையும் ஒத்து உழைக்காது. இனி சென்னையில் மாதா மாதம் மழை இருக்கும், கொஞ்சம் கொஞ்சமாக கடல் நிலத்தை ஆக்கிரமிக்கும். 2040 காலகட்டங்களில் மெரினா பீச் லஸ் கார்னர் வரை வந்திருக்கும்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
30-நவ-202112:15:13 IST Report Abuse
 N.Purushothaman சிங்கார சென்னைக்கு பிளான் போட்டு வெனீஸ் சென்னையா யாருமே கற்பனை கூட பண்ண முடியாத சாதனை படைச்சவங்க தான் விடியல் ஆட்சிக்காரனுங்க .....கோபாலபுர குடும்பத்துக்கு கெத்தா ஓட்டு போட்டு இன்னிக்கு குளுகுளு வானிலையில் சந்தோஷமா இருக்காங்க
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
30-நவ-202112:11:08 IST Report Abuse
Girija இன்னும் ஐம்பது ஆண்டுகளில் பாதி சென்னை கடலுக்குள் போகப்போகிறது அப்புறம் என்ன சாதனை ? இந்த மழைக்கு பின் கடல் நீர் உட்புகுந்தது தெரிய வரும் . நிலத்தடி நீர் உப்பாக மாறிவரும் . சென்னையை காலி செய்து புறநகர் மேல்மருவத்தூர் போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்வதுதான் வணிகம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X