ஒமைக்ரான் எதிரொலி: 100 கோடி தடுப்பூசி ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புகிறது சீனா

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
பெய்ஜிங்: ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸின் உருமாறிய ‛ஒமைக்ரான்' வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, அதைத் தடுக்கும் வகையில் அங்குள்ள மக்களுக்காக 100 கோடி தடுப்பூசிகளை சீனா அனுப்ப முடிவு செய்துள்ளது.தென் ஆப்பிரிக்காவில் தான் நவ., 24ம் தேதி முதல்முறையாக ‛ஓமைக்ரான்' வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன்,
China, send, 100 crore, vaccines, African countries, Announcement,  President, Xi Jinping, 100 கோடி, தடுப்பூசி, ஆப்பிரிக்க நாடுகள், சீனா வழங்கல்,

பெய்ஜிங்: ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸின் உருமாறிய ‛ஒமைக்ரான்' வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, அதைத் தடுக்கும் வகையில் அங்குள்ள மக்களுக்காக 100 கோடி தடுப்பூசிகளை சீனா அனுப்ப முடிவு செய்துள்ளது.


latest tamil news


தென் ஆப்பிரிக்காவில் தான் நவ., 24ம் தேதி முதல்முறையாக ‛ஓமைக்ரான்' வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil newsஇதனால் உலக நாடுகள் தென்ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு ஏராளமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ‛ஓமைக்ரான்' வைரஸ் பாதிப்பிலிருந்து காக்கும் வகையில் சீனா சர்வதேச விமானப் போக்குவரத்தை தங்கள் நாட்டிலிருந்து தொடங்கவில்லை.

சீனா-ஆப்பிரிக்கா கூட்டுறவின் 8வது மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது: ஆப்பிரிக்க நாடுகள் கொரோனா வைரஸையும், உருமாறிய ஒமைக்ரான் வைரஸை எதிர்த்துப் போராடும் வகையி்ல் கூடுதலாக 100 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும்.


latest tamil newsஏற்கெனவே 60 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதோடு சேர்த்து கூடுதலாக 100 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். ஆப்பிரிக்க நாடுகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 10 சுகாதாரத் தி்ட்டங்களைச் செயல்படுத்தவும், 1,500 மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-202119:28:18 IST Report Abuse
Sathya useless vaccine. China is just dumping it. Anything free from China is of no use
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
30-நவ-202117:44:55 IST Report Abuse
Balaji ஊசிக்கு கட்டுப்படாத இந்த உருமாறிய கொரோனாவிற்கு என்ன ஊசி... உலகளவில் பெரிய ஏமாற்று வேலை நடந்து கொண்டிருக்கிறதோ...
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
30-நவ-202117:42:11 IST Report Abuse
Balaji இந்த வைரஸ் ஆப்பிரிக்காவில் கிளம்பியதே அங்கு ஊசி வ்யாவாராம் செய்யத்தான் என்பது என்னுடைய கணிப்பு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X