பொது செய்தி

இந்தியா

இறந்ததை மறந்த மருத்துவமனை: உடல்களை 16 மாதங்களாக தகனம் செய்யாத அவலம்

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
பெங்களூரு: கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி கொரோனா தொற்றால் உயிரிழந்த இருவரின் உடல்களை மறந்துபோய் 16 மாதங்கள் ஆகியும் தகனம் செய்யாமல் மருத்துவமனை பிணவறையிலேயே வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் துர்கா சுமித்ரா (வயது 40) மற்றும் முனிராஜ் (வயது 50) ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெங்களூரு ராஜாஜி
Bodies, Rotting, Since 2020, Two Families, Struck, Covid, கொரோனா, உயிரிழப்பு, 2020,பெங்களூரு, உடல்கள், தகனம், மருத்துவமனை

பெங்களூரு: கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி கொரோனா தொற்றால் உயிரிழந்த இருவரின் உடல்களை மறந்துபோய் 16 மாதங்கள் ஆகியும் தகனம் செய்யாமல் மருத்துவமனை பிணவறையிலேயே வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் துர்கா சுமித்ரா (வயது 40) மற்றும் முனிராஜ் (வயது 50) ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் 2020, ஜூலை 2ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அந்த நேரத்தில், கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்ததால் , நோயாளிகளின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல், மருத்துவமனை நிர்வாகமே தகனம் செய்தது. இதனால், நோயாளிகளின் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டதுடன், உடல்கள் தகனம் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் சொல்லப்பட்டுள்ளது.


latest tamil news


ஆனால், கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு மேலாக இருவரது உடல்கள் மருத்துவமனையின் பிணவறையிலேயே இருந்துள்ளது. பழைய பிணவறையை சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் துர்நாற்றத்தை உணர்ந்து அங்கு தேடிப்பார்த்ததில், குளிர்சாதனப்பெட்டியில் பாதி அழுகிய நிலையில் இருவரின் உடலையும் கண்டனர். கொரோனா மரணங்கள் குறைந்துவிட்டதால், பழைய பிணவறை பயன்படுத்தப்படாமல் இருந்ததாகவும், அதனால், குளிர்சாதனப்பெட்டியில் இருந்த இருவரின் உடல்களை கவனிக்கவில்லை எனவும் மருத்துவமனையை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.

இந்த தகவல் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியவரவே அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனையின் இந்த அலட்சிய போக்கை பலரும் கண்டித்துள்ளனர். பல்வேறு அமைப்பினரும் , அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து போராடி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
30-நவ-202121:48:35 IST Report Abuse
K.n. Dhasarathan அந்த சுகாதார துறை தலைவர், டீன், பிணவறை பொறுப்பாளர் ஆகியோரை தூக்கில் போடவேண்டும், கடுமையான நடவடிக்கை இல்லையெனில் இப்படித்தான் ஆகும்.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் பேசறப்போ நல்லா இலக்கணமாத்தான் பேசறாங்க இதையெல்லாம் பேப்பர்ல போட்டா அது தேச துரோகமல்லவா? பாத்து கொஞ்சம் சூதானமா நடந்துக்கோங்கப்பா
Rate this:
Cancel
mukundan - chennai,இந்தியா
30-நவ-202119:12:57 IST Report Abuse
mukundan " இந்த தகவல் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியவரவே அதிர்ச்சி அடைந்தனர் " 16 மாதங்கள் இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? வேறு ஒருவரின் உடலுக்கு சடங்குகளை செய்தனரா....?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X