பொது செய்தி

இந்தியா

தென் ஆப்ரிக்காவில் இருந்து சண்டிகர் திரும்பியவருக்கு கோவிட்

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சண்டிகர்: தென் ஆப்ரிக்காவில் இருந்து கடந்த நவ., 21ம் தேதி சண்டிகருக்கு திரும்பியவருக்கு கோவிட் உறுதியானது. அவர், ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக, அவரது மாதிரிகள், டில்லியில் உள்ள தேசிய நோய் தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தென் ஆப்ரிக்காவில் அறிகுறியற்ற கொரோனா தொற்று சமீபத்தில் அதிகரிக்க துவங்கியது. அடுத்தடுத்து
தென் ஆப்ரிக்கா, சண்டிகர், கோவிட், ஒமைக்ரான்

சண்டிகர்: தென் ஆப்ரிக்காவில் இருந்து கடந்த நவ., 21ம் தேதி சண்டிகருக்கு திரும்பியவருக்கு கோவிட் உறுதியானது. அவர், ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக, அவரது மாதிரிகள், டில்லியில் உள்ள தேசிய நோய் தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் அறிகுறியற்ற கொரோனா தொற்று சமீபத்தில் அதிகரிக்க துவங்கியது. அடுத்தடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் பி.1.1.529 என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு ஒமைக்ரான் என, உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் 'ஸ்பைக்' புரதத்தில் 30க்கும் அதிகமான முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது வேகமாக பரவம் தன்மை உடையதாகவும், தடுப்பூசியின் செயல் திறனுக்கு கட்டுப்படாமல் போக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்தனர். இதனையடுத்து உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.


latest tamil news


இந்நிலையில், கடந்த 21ம் தேதி தென் ஆப்ரிக்காவில் இருந்து 38 வயதான நபர் யூனியன் பிரதேசமான சண்டிகருக்கு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், நெகட்டிவ் என வந்தது. இருப்பினும் அவர் விதிமுறைகளின்படி வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டு சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், 7 நாட்கள் கழித்து நேற்று மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கோவிட் உறுதியானது. மேலும், அவரது உறவினர் ஒருவருக்கும், வீட்டு பணியாளர் ஒருவருக்கும் தொற்று உறுதியானது. வீட்டில் இருந்த மற்ற 2 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்தது. மேலும் ஒருவரின் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

சுகாதாரத்துறையினரின், 38 வயதானவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை, டில்லியில் உள்ள தேசிய நோய் தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் கிடைக்கும் முடிவுகளை பொறுத்தே அவர், ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மதுராவில் 4 வெளிநாட்டினருக்கு கோவிட்


உ.பி., மாநிலம் மதுராவிற்கு லுதியானா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து நாடுகளில் இருந்து 15 நாள் சுற்றுப்பயணமாக வந்த 4 பேருக்கு கோவிட் உறுதியாகியுள்ளது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் தொடர்பில் இருந்து 44 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
30-நவ-202115:53:17 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் ஜப்பான் அரசைவிட... நம்ம நாட்டு அரசாங்கம் ரொம்ப புத்திசாலி அரசாங்கமாக இருக்கிறது... ஆப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் பரவுகிறது..ன்னு என்ற உடனே... ஆகாய வழி, கடல் வழி என அனைத்து வழிகளையும் அடைத்திருக்க வேண்டும். நாமதான் ரொம்ப புத்திசாலி ஆச்சே...? எல்லா விமானங்களையும் அனுமதிச்சுட்டு... இப்ப, அவனுக்கு இருக்கா, இவனுக்கு இருக்கா...ன்னு பின்னாடியே சுத்திகிட்டிருக்கானுங்க...? மக்களை காக்க வேண்டுமென்றால், சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கனவே 2020லசீன நாட்லந்து வந்தவனுங்க கொண்டு வருவதற்கு வசதியாக, எல்லா வழிகளையும் திறந்து வச்சு... முடிச்சானுங்க... அதுலந்து மீண்டு வரலை... கொஞ்சம் குறைஞ்சிருக்கு... அந்த அனுபவித்தில் பாடம் படிக்காம... டெய்லி மும்பை, டெல்லி வழியாக ஆப்ரிக்க நாட்லந்து வரவங்கள பூங்கொத்து கொடுத்து வரவச்சிட்டு... வேலியில ஓடுற ஓணான... வேட்டிக்குள்ள இருக்குற பட்டாபட்டி டவுசருக்குள்ளாற விட்டுவிட்டு.... இப்ப “குத்துது... குடையுது”....ன்னா என்ன அர்த்தம்...? “வருமுன் காப்போம்”...ங்கற எண்ணமோ, திட்டமோ இல்லாத அரசு...? “ஒரு வீட்டை காப்பாத்தணும்னா... ஒருத்தனை இழக்கலாம் - ஒரு தெருவை காப்பாத்தணும்னா... ஒரு வீட்டை இழக்கலாம் - ஒரு மாநிலத்தை காப்பாத்தணும்னா... ஒரு ஊரை இழக்கலாம்...ங்கற பழமொழியை ஞாபகம் வச்சிக்காதவங்க...? பணம் சம்பாதிக்கவும், ஜாலியாக இருக்கவும் ஆப்ரிக்கா நாட்டுக்கு போனங்கவள... அப்படியே கழட்டி விட்டத்தான்... இந்தியாவில் உள்ள நூற்று முப்பது கோடி மக்களை காப்பாற்ற முடியும்...? இந்த அடிப்படைகூட தெரியாம... எந்த தைரியத்துல... ஆப்ரிக்க நாட்டு விமானங்கள உள்ளே விட்டாங்கன்னு தெரியல...?
Rate this:
Cancel
30-நவ-202115:40:24 IST Report Abuse
முருகன் மத்திய அரசு வெளிநாட்டு விமானம் மற்றும் பயணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
30-நவ-202113:05:44 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் ஜப்பான் அரசைவிட... நம்ம நாட்டு அரசாங்கம் ரொம்ப புத்திசாலி அரசாங்கமாக இருக்கிறது... ஆப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் பரவுகிறது..ன்னு என்ற உடனே... ஆகாய வழி, கடல் வழி என அனைத்து வழிகளையும் அடைத்திருக்க வேண்டும். நாமதான் ரொம்ப புத்திசாலி ஆச்சே? எல்லா விமானங்களையும் அனுமதிச்சுட்டு... இப்ப, அவனுக்கு இருக்கா, இவனுக்கு இருக்கா...ன்னு பின்னாடியே சுத்திகிட்டிருக்கானுங்க...? மக்களை காக்க வேண்டுமென்றால், சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கனவே 2020லசீன நாட்லந்து வந்தவனுங்க கொண்டு வருவதற்கு வசதியாக, எல்லா வழிகளையும் திறந்து வச்சு... முடிச்சானுங்க... அதுலந்து மீண்டு வரலை... கொஞ்சம் குறைஞ்சிருக்கு... அந்த அனுபவித்தில் பாடம் படிக்காம... டெய்லி மும்பை, டெல்லி வழியாக ஆப்ரிக்க நாட்லந்து வரவங்கள பூங்கொத்து கொடுத்து வரவச்சிட்டு... வேலியில ஓடுற ஓணான... வேட்டிக்குள்ள இருக்குற பட்டாபட்டி டவுசருக்குள்ளாற விட்டுவிட்டு.... இப்ப “குத்துது... குடையுது”....ன்னா என்ன அர்த்தம்...? “வருமுன் காப்போம்”...ங்கற எண்ணமோ, திட்டமோ இல்லாத அரசு...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X