எதிர்க்கட்சிகள் அமளி: 2வது நாளாக லோக்சபா ஒத்திவைப்பு

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: எதிர்கட்சியினர் அமளியால் பார்லி., இரு அவைகளும் 2 வது நாளாக இன்றும் (நவ.29) ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அலுவல் பணிகள் ஏதும் நடக்கவில்லை.பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. முதல் நாள் அவை துவங்கியதும், வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். ஆனால்

புதுடில்லி: எதிர்கட்சியினர் அமளியால் பார்லி., இரு அவைகளும் 2 வது நாளாக இன்றும் (நவ.29) ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அலுவல் பணிகள் ஏதும் நடக்கவில்லை.latest tamil newsபார்லி., குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. முதல் நாள் அவை துவங்கியதும், வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து மசோதா குரல் ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கை செய்யப்பட்டது. இதனால் எதிர்கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதுபோல் ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.


latest tamil newsகடந்த பார்லி., கூட்டத்தில் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷங்கள் எழுப்பியதுடன் பெண் காவலர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சஸ்பெண்டை திரும்ப பெற வேண்டும் என இன்று எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். ஆனால் இதனை ஏற்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அமளி நிலவியதால் இன்று இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.வெளியே வந்த எம்பி.,க்கள் பார்லி., வளாகம் காந்தி சிலை அருகே ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
30-நவ-202119:53:34 IST Report Abuse
sankaseshan There are videos evidence Marshall a lady manhandled by tmc mp .other members tore the papers throw on the face of deputy chairman, spoiled his s . Even if they apologized suspension should not be revoked.. The decision of suspension taken by Rajaya sabah chairman not by two people as suggested by a empty headed person .
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
30-நவ-202118:21:11 IST Report Abuse
sankar காங்கிரஸ் - அடுத்த தேர்தலில் சிங்கிள் டிஜிட் மட்டுமே
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
30-நவ-202114:55:07 IST Report Abuse
Samathuvan இது எல்லாம் நம்ம பார்லிமெண்டுல சகஜம். குளிர்கால கூட்டம்னா, சூடான வாக்குவாதமும் இருந்தாதான் கொஞ்சம் வார்மா இருக்கும். பின்னே என்ன அவங்க ரெண்டு பேருமே குசு குசுன்னு பேசிகிட்டு எல்லாத்துலயும் முடிவெடுக்குறதுதான் சரியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X