பொது செய்தி

இந்தியா

குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்; 2 வாரங்களில் முடிவு: அரோரா

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛இந்தியாவில் 12 வயது முதல் 17 வயது வரை உள்ள 44 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும், நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதோருக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து இரண்டு வாரங்களில் கொள்கை முடிவு வகுக்கப்படும்,'' என, தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் அரோரா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டாக்டர் அரோரா
India, Vaccine, Children, Booster Dose, Result, 2 weeks Doctor, Aurora, இந்தியா, குழந்தைகள், தடுப்பூசி, பூஸ்டர் டோஸ், 2 வாரங்கள், முடிவு, டாக்டர் அரோரா,

புதுடில்லி: ‛‛இந்தியாவில் 12 வயது முதல் 17 வயது வரை உள்ள 44 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும், நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதோருக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து இரண்டு வாரங்களில் கொள்கை முடிவு வகுக்கப்படும்,'' என, தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் அரோரா தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக டாக்டர் அரோரா தெரிவித்ததாவது: பல நாடுகளிலும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகின்றன. இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும் என்றால் 94 கோடி டோஸ் தேவைப்படும். இந்தியாவில் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. இருந்தாலும், இந்தியாவில் 12 முதல் 15 கோடி மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாமல் உள்ளனர், 30 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இப்போதைக்கு முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.


latest tamil news


அதுமட்டுமல்லாமல் புதிய உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்தும் அதன் தடுப்பூசி எதிர்ப்புத்திறன் என்னவென்பது குறித்தும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருக்கு வந்த இருவரில் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பும், மற்றொருவருக்கு டெல்டாவைத் தவிர்த்து வித்தியாசமான வைரஸும் தாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது. கர்நாடக அரசு அது குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இத்தகைய சூழலில், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும், நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதோருக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் கொள்கை முடிவு வகுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் இந்திய மக்கள் தொகை எவ்வளவு 160 கோடியை தாண்டியது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X