பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் தை 1 தமிழ் புத்தாண்டா?; சொல்லாமல் சொல்லுது ரேஷன் பை

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (88)
Share
Advertisement
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தரப்பில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பையில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் என அச்சிடப்பட்டுள்ளதால், மீண்டும் தி.மு.க அரசு தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க உள்ளதாக தெரிகிறது.தமிழர்கள் காலம் காலமாக தை 1ம் தேதியை தமிழர் திருநாளாகவும், சித்திரை 1ம் தேதியை தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடி வருகின்றனர்.
Ration Bag, Tamil NewYear, Controversy, Tamilnadu, DMK, Stalin, CM, ரேஷன் பை, பொங்கல், தொகுப்பு, பை, தமிழ் புத்தாண்டு, தமிழக அரசு, திமுக, ஸ்டாலின், முதல்வர்

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தரப்பில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பையில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் என அச்சிடப்பட்டுள்ளதால், மீண்டும் தி.மு.க அரசு தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க உள்ளதாக தெரிகிறது.

தமிழர்கள் காலம் காலமாக தை 1ம் தேதியை தமிழர் திருநாளாகவும், சித்திரை 1ம் தேதியை தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, தமிழ் புத்தாண்டு சட்டத்தை இயற்றினார். அதில், தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஜெயலலிதா முதல்வரானார். இதனையடுத்து தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை சட்டம்) 2008 நீக்கச் செய்யும் சட்ட மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்த அப்போதைய அ.தி.மு.க அரசு, சித்திரை 1ம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்து, சட்ட மசோதா நிறைவேற்றியது.


latest tamil news


இன்றளவும் சித்திரை 1ம் தேதியே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வரும் சூழலில், தற்போது மீண்டும் தி.மு.க ஆட்சி அமைத்துள்ளதால் தமிழ் புத்தாண்டு மீண்டும் மாற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இதுவரையில் அதற்கான அறிவிப்பு வெளிவரவில்லை. இந்நிலையில், பொங்கல் தினமான தை 1-ம் தேதி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த தொகுப்புடன் வழங்கப்படும் பையின் புகைப்படம் வெளியாகி புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


பையின் இருபுறமும் தமிழக அரசு முத்திரை அச்சடிக்கப்பட்டிருந்தது. அதனுடன் ஒருபுறம் உழவர்கள் மாடுகளுடன் பொங்கல் கொண்டாடும் படமும், மறுபுறம் 'இனிய தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்' எனவும் அச்சிடப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் தமிழக அரசு தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழர்களிடையே மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தை வைத்து மாறி மாறி அரசியல் செய்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-202121:58:06 IST Report Abuse
s.sivarajan அவர்களின் வெற்றியின் ரகசியமே அந்த தைரியம்தான்
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
30-நவ-202121:30:25 IST Report Abuse
sankaranarayanan நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எந்த வழியும் செய்யவில்லை ஊர் பெயரை மாற்றுவோமா - திருப்பெயரை மாற்றுவோமா - ஆள் பெயரை மாற்றுவோமா - பண்டிகை தினத்தை மாற்றுவோமா - பள்ளிகளில் பாடத்திட்டத்தை மாற்றுவோமா - ஆளை மாற்றுவோமா - இடத்தை மாற்றுவோமா - அரசு அலுவலர்களை மாற்றுவோமா - பழக்க வழக்கத்தை மாற்றுவோமா - ஆட்சிக்கு வந்தபின் கொடுத்தஐ வாக்குறுதிகளை மாற்றுவோமா - உடை, தலை அலங்கரித்தலை மாற்றுவோமா - பேச்சை மாற்றுவோமா - இப்படி எல்லாவற்றையும் மாற்றிக்கொன்டே இருந்தால் மக்களுக்கு நன்மை பயன் படக்கூடிய எதுவுமே மாற்றப்படவில்லையே?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-நவ-202121:12:40 IST Report Abuse
Natarajan Ramanathan அப்படியே ஆகஸ்ட் ஏழு தமிழர்களுக்கு தீபாவளி என்றும் அறிவித்துவிடலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X