மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் ரத்து: மத்திய அமைச்சர், எதற்காக மன்னிப்பு: ராகுல்

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி: ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன 12 எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. அப்போது, கடந்த ஆக.,11 அன்று பார்லிமென்ட் கூட்டத்தொடரில்
Congress,Rahul,Rahul Gandhi, காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி, எம்பி, சஸ்பெண்ட்,

புதுடில்லி: ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன 12 எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. அப்போது, கடந்த ஆக.,11 அன்று பார்லிமென்ட் கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராஜ்யசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.,க்களில் புலோ தேவி நேதம், சாயா வர்மா, ரிபுன் போரா, ராஜாமணி படேல், சையத் நசீர் உசேன், அகிலேஷ் பிரசாத் சிங் ஆகிய ஆறு பேர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள். சிவசேனாவைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய், திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் டோலா சென், சாந்தா செட்ரி. மார்க்சிஸ்ட் எம்.பி., இலமரம் கரீம், இந்திய கம்யூ., - எம்.பி., பினோய் விஸ்வம் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இன்று (நவ.,30) ஆலோசனை நடத்தினர்.

பின்னர், மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் 8 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், ராஜ்யசபா அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினர். அப்போது, 12 எம்.பி.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.


பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த மழைக்கால கூட்டத்தின்போது, கடும் அமளியில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த 12 ராஜ்யசபா எம்பிக்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்று ராஜ்யசபா கூடியதும், 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்கட்சிகள் கேட்டன. சபநாயகர் வெங்கய்யா நாயுடு, அவர்களது கோரிக்கையை நிராகரித்தார். எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர். அவை ஒத்தி வைக்கப்பட்டது. பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் கூடிய எம்பிக்கள், சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்

latest tamil news
ஆனால், சம்பந்தப்பட்ட எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்காதவரை, சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது என வெங்கையா நாயுடு கூறியதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.


latest tamil news


எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்டில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள், மஹாத்மா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news


பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறும்போது, 12 எம்.பி.,க்கள் மன்னிப்பு கோரினால், சஸ்பெண்ட் உத்தரவு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் எனக்கூறினார்.


latest tamil news


இதற்கு பதிலளித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? மக்கள் கருத்தை பார்லிமென்டில் எழுப்பியதற்காகவா மன்னிப்பு கோர வேண்டும்? முடியாது என தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜூனா கார்கே கூறும்போது, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை என தெரிவித்தார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி., மனோஜ் ஜா கூறும்போது, எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். சஸ்பெண்ட் நடவடிக்கை, ஜனநாயகத்திற்கு, சட்டத்திற்கு எதிரானது. இந்த நடவடிக்கை குறித்து மறுபரிசீலனை செய்யாவிட்டால், கூட்டத்தொடரை புறக்கணிப்பது குறித்து பரிசீலனை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202122:39:21 IST Report Abuse
Kasimani Baskaran "மஹாத்மா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்" - பெயரை அபகரித்தது போதாது என்று அவர் மீது ஏன் இவர்களுக்கு இப்படி ஒரு காண்டு?
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
30-நவ-202120:22:21 IST Report Abuse
அன்பு மன்னிப்பு கேட்க சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவராக பிஜேபிக்கு தெரியவில்லை? பிஜேபி எதிர்க்கட்சியாக இருந்தபோது, நடந்த அமளிக்கு, ஒருதடவையாவது மன்னிப்பு கேட்டுள்ளார்களா?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-நவ-202119:40:34 IST Report Abuse
sankaseshan தவறுக்கு மன்னிப்பு கேட்பது மனித நாகரீகம் சவூதி அப்துல் PM போப்பின் காலில் விழுந்தாரா ,என்னப்பா கதைவிடரே போப் மோடிஜியை அன்புடன் அணைத்து கொண்டார் வகாடின் வரலாற்றில் இதுபோல நடந்ததில்லை பப்புவும் அவன் அம்மாவும் போப்பின் கிட்டே நெருங்க முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X