சர்வதேச விமானங்களை உடனே நிறுத்துங்கள்: முதல்வர் கெஜ்ரிவால்

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛உலகில் 13 நாடுகளில் 'ஒமைக்ரான்' வைரஸ் பரவிய நிலையில் இந்தியாவில் சர்வதேச விமானங்களை உடனடியாக நிறுத்துங்கள்,'' என்று பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.புதிய உருமாற்ற வைரஸான ஒமைக்ரான் மிகத் தீவிரமான அளவில் உலகளாவிய ஆபத்தை ஏற்படுத்தும். அது அலையாக பரவும்போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உலக
Stop, International, flights, Immediately, Delhi Cm, Kejriwal, சர்வதேச, விமானங்கள், உடனே நிறுத்துங்கள், டில்லி முதல்வர், கெஜ்ரிவால்,

புதுடில்லி: ‛‛உலகில் 13 நாடுகளில் 'ஒமைக்ரான்' வைரஸ் பரவிய நிலையில் இந்தியாவில் சர்வதேச விமானங்களை உடனடியாக நிறுத்துங்கள்,'' என்று பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய உருமாற்ற வைரஸான ஒமைக்ரான் மிகத் தீவிரமான அளவில் உலகளாவிய ஆபத்தை ஏற்படுத்தும். அது அலையாக பரவும்போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.


latest tamil news


ஒமைக்ரான் பற்றிய கவலைகள் அதிகரித்துவரும் நிலையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று (நவ.,29) தெரிவித்துள்ளதாவது: ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து விமானங்களை பல நாடுகள் கட்டுப்படுத்தியுள்ளன. நாம் ஏன் தாமதிக்கிறோம்? புதிய உருமாற்ற வைரஸின் பரவலைச் சரிபார்க்க இஸ்ரேல், ஜப்பான் விரிவான பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

முதல் அலையிலும், நாம் விமானங்களுக்கான தடையை தாமதப்படுத்தினோம். பெரும்பாலான சர்வதேச விமானங்கள் டில்லியில் தரையிறங்குகின்றன. மேலும் இந்நகரம் மிகவும் பாதிக்கப்படும். தயவுசெய்து சர்வதேச விமானங்களை பிரதமர் மோடி உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


latest tamil newsமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ''பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். எந்த தாமதமும் மிகவும் தீங்கு விளைவிக்கும்,'' என்று வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நுழைவு விதிகளில், ''இந்தியாவிற்கு வரும் ஒவ்வொரு சர்வதேச பயணிகளும் சுய அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்து எதிர்மறையான ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை அறிக்கையை காட்ட வேண்டும்,'' என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
30-நவ-202123:52:32 IST Report Abuse
Kundalakesi Vari poidum la
Rate this:
Cancel
30-நவ-202122:36:57 IST Report Abuse
அப்புசாமி இனிமே கோவிட் மீண்டும் பரவிச்சுன்னா நேருதான் காரணம். மத்தவங்க எல்லோரும் அடுத்தவங்களை எச்சரிச்சாச்சு.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
30-நவ-202121:58:25 IST Report Abuse
அன்பு இவர் என்னமோ வெளியுறவு அமைச்சர் நினைப்பில், இஷ்டத்திற்கு பேசுகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X