காங்கிரஸ் - திரிணமுல் காங்., இடையே நீடிக்கும் பனிப்போர்! கேள்விக்குறியாகும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் இடையே நிலவும் பனிப்போர் காரணமாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இக்கட்சிகளின் பனிப்போர், தற்போதைய பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் வெளிப்படையாக தெரிந்தது. இரு கட்சிகளும் வெளிப்படையாக விமர்சனம் செய்யாவிட்டாலும், இரு கட்சிகள் இடையே ஏற்பட்ட விரிசல் தெளிவாக தெரிகிறது.கடந்த ஆக.,20 ம் தேதி
காங்கிரஸ், திரிணமுல் காங் ,  பனிப்போர், கேள்விக்குறி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை

புதுடில்லி: காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் இடையே நிலவும் பனிப்போர் காரணமாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இக்கட்சிகளின் பனிப்போர், தற்போதைய பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் வெளிப்படையாக தெரிந்தது. இரு கட்சிகளும் வெளிப்படையாக விமர்சனம் செய்யாவிட்டாலும், இரு கட்சிகள் இடையே ஏற்பட்ட விரிசல் தெளிவாக தெரிகிறது.

கடந்த ஆக.,20 ம் தேதி டில்லி சென்ற திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மே.வங்க முதல்வருமான மம்தா, காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் மம்தா கூறும்போது, மத்தியில் ஆளும் பா.ஜ.,விற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால், நிலைமை இன்று முற்றிலும் மாறியுள்ளது. மே.வங்கத்தில் மட்டும் உள்ள திரிணமுல் காங்கிரசை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் பணியில் மம்தா ஈடுபட்டுள்ளார். மற்ற கட்சியில் இருந்து திரிணமுல்லில் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்த போதிலும், அதிகம் பாதிக்கப்பட்டது காங்கிரஸ் தான். அசாமில், பெண்கள் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ் துவங்கி, கோவா, உ.பி., மேகாலயாவில் காங்கிரஸ் நிர்வாகிகள் மம்தாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


latest tamil newsசமீபத்தில் மேகாலயாவில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 எம்.எல்.ஏ.,க்கள் திரிணமுல்லில் ஐக்கியமாகினர். தற்போது வரை பார்லிமென்டிற்கு வெளியே, இரு கட்சிகளுக்கு இடையே நடந்து வந்த மறைமுக மோதல், தற்போது பார்லிமென்டிற்குள்ளும் ஏற்பட்டுள்ளது.

நேற்று(நவ.,29) துவங்கிய பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே, எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். ஆனால், அதனை திரிணமுல் புறக்கணித்தது. மஹாத்மா காந்தி சிலை முன்பு, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், திரிணமுல் எம்.பி.,க்கள் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். திரிணமுல் உள்ளிட்ட 12 எம்.பி.,க்கள் சஸ்பெணட் தொடர்பாக விவாதிக்க மல்லிகார்ஜூனா கார்கே அழைப்பு விடுத்த கூட்டத்தையும் திரிணமுல் புறக்கணித்தது. இது தொடர்பாக 11 கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக்கையிலும், திரிணமுல் இடம்பெறவில்லை. அவர் பேட்டி அளித்த போதும், திரிணமுல் எம்.பி.,க்கள் யாரும் அருகில் இல்லை. மாறாக அக்கட்சி தனியாக பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தது.


latest tamil newsகூட்டறிக்கை தொடர்பாக திரிணமுல் நிர்வாகிகளை, மல்லிகார்ஜூனா கார்கே அணுகிய போது, அதில் கையெழுத்து போட மறுத்துவிட்டனர். தனியாக பத்திரிகையாளர்களை சந்திப்பதாக தெரிவித்து விட்டதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் தொடர்பாக மல்லிகார்ஜூனா கார்கே ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திலும் அக்கட்சி பங்கேற்காதது, இரு கட்சிகளுக்கு இடையே உள்ள பனிப்போரை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு தங்களால் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக வெளிப்படையாக விமர்சிக்க காங்கிரஸ் தயங்கும் நேரத்தில், திரிணமுல் காங்கிரசுக்கு என தனிப்பட்ட விருப்பங்கள் உள்ளதையே காட்டுகிறது என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் டில்லி சென்றிருந்த மம்தா, சோனியாவை சந்திக்கவில்லை. இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ஒவ்வொரு முறை டில்லி வரும்போது சோனியாவை சந்திக்க வேண்டியது கட்டாயமா? என கேள்வி எழுப்பினார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று கொள்வதற்கான மசோதா நேற்று பார்லிமென்டில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட போது காங்கிரஸ் உறுப்பினர்கள் விவாதிக்க எழுந்த போது, திரிணமுல் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது.

திரிணமுல்லின் நிலைப்பாடு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: திரிணமுல், 'டபுள் கேம்' விளையாடுகிறது. பார்லிமென்டின் கடந்த கூட்டத்தொடரின் போது அக்கட்சி எங்களுடன் இருந்தது. அப்போதும், தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே இருந்தது. பல எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் தலைவராக மம்தா, எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இரண்டு/ மூன்று மாத இடைவெளியில், மம்தா அரசியல் பல்டி அடித்துள்ளார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது உறவினரை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்தது. அப்போது, அவருக்கு பாதுகாப்பு அளிக்கவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு அவர் தலைமை ஏற்கும்படியும் பா.ஜ.,வுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்ட போது திரிணமுல் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால், அக்கட்சி தனித்து விடப்பட்டுள்ளது. தற்போது, தங்களின் சொந்த நலனுக்காக அக்கட்சி, பா.ஜ.,வின் இரண்டாவது அணியாக செயல்பட்டு வருகிறது. இதனால், ஏற்படும் அதிக பலன்களை பா.ஜ., அறுவடை செய்கிறது. எதிர்க்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டிற்காக மம்தாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இனி வரும் காலங்களிலும் காங்கிரஸ் - திரிணமுல் காங்கிரஸ் இடையே உறவு சுமூகமாக இருக்காது எனவும், மோதல் நீடிக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202122:36:31 IST Report Abuse
Kasimani Baskaran சாமி கல்கத்தா வந்தார், கவர்னரை பார்த்தார், அம்மனியிடம் டெல்லியில் வந்து பேசினார். காங்கிரஸ் உறவு கலகலத்துப்போனது. அடுத்து மகாராஷ்டிரா என்று பேசிக்கொள்கிறார்கள்... ஆகட்டும் பார்க்கலாம்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
30-நவ-202121:28:21 IST Report Abuse
jayvee It is an International problem.. Between Italy and Bangladesh
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
30-நவ-202121:02:26 IST Report Abuse
SUBBU இந்த மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸின் எடுபிடி,இவனை நூறு ரூபாய்கு நடி என்று சோனியா சொன்னால் ஆயிரம் ரூபாய்க்கு நடித்து கொடுப்பான்.இவனுக்கு மண்டை பெரியதென்றாலும் அதற்கேற்ற மூளை இல்லை. உடம்பெல்லாம் விஷப் பயலான திமுகவின் அல்லக்கை பீட்டர் அல்போன்ஸிடம் இவன் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X