மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: “புதிய கோவிட் வகையான ஒமைக்ரான் பற்றி மக்கள் பீதி அடைய வேண்டாம். தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போடுங்கள், முகக்கவசம் அணியுங்கள். இதை பின்பற்றினாலே மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது,” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.கோவிட் வைரஸ் பரவ, பரவ உருமாறியபடியே இருக்கிறது. கடந்த ஏப்ரலில் டெல்டா வகையாக உருமாறிய கோவிட் தொற்று கடுமையான நுரையீரல் பாதிப்பை
No more curfews, US President, jo Biden, மீண்டும், ஊரடங்கு, தேவைப்படாது, அமெரிக்க அதிபர், ஜோ பைடன், உறுதி,

வாஷிங்டன்: “புதிய கோவிட் வகையான ஒமைக்ரான் பற்றி மக்கள் பீதி அடைய வேண்டாம். தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போடுங்கள், முகக்கவசம் அணியுங்கள். இதை பின்பற்றினாலே மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது,” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

கோவிட் வைரஸ் பரவ, பரவ உருமாறியபடியே இருக்கிறது. கடந்த ஏப்ரலில் டெல்டா வகையாக உருமாறிய கோவிட் தொற்று கடுமையான நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தியது. இறப்புகளையும் அதிகப்படுத்தியது. அதன் பிறகு நோய் பாதிப்பு உலகளவில் கட்டுக்குள் வந்துவிட்டதாக எண்ணிய நிலையில் தென்னாப்ரிக்காவில் பல்வேறு உருமாற்றங்களை கண்டு ஒமைக்ரானாக வந்துள்ளது. இது தொற்று பாதிப்பை அதிகரிக்கும் ஆபத்தை கொண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுவரை ஒமைக்ரான் பாதிப்பால் யாரும் இறந்ததாக தகவல் இல்லை.


latest tamil news




தென் ஆப்ரிக்காவுக்கு பாராட்டு



இந்நிலையில் புதிய வகை வைரஸ் குறித்து அமெரிக்க அதிபர் பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: புதிய வகை வைரஸை உடனடியாக உலகிற்கு அறிவித்த தென் ஆப்ரிக்க விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். இது போன்ற வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்க வேண்டும். இதனால் புதிய அச்சுறுத்தல்களை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். அதைத் தான் செய்துள்ளோம். ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பயணங்களை உடனடியாக தடை செய்தேன். பயணக் கட்டுப்பாடுகள் ஒமைக்ரானின் வேகத்தைக் குறைக்கலாம். ஆனாலும், தடுக்க முடியாது.


பீதி வேண்டாம்!



இருப்பினும் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க நமக்கு நேரம் கிடைக்கும். தடுப்பூசி போட வேண்டும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசிக்கு அவசியம் இருப்பவர்கள் அதை போடுங்கள். இந்த புதிய வகை கவனத்தில் கொள்ள வேண்டிய வகை தானே தவிர பீதி ஏற்படுத்தும் வகை அல்ல. நம்மிடம் உலகின் சிறந்த தடுப்பூசி, சிறந்த மருந்துகள், சிறந்த விஞ்ஞானிகள் உள்ளனர். இந்த புதிய வகையை அறிவியல்பூர்வமாக எதிர்த்து போராடுவோம். நம்மிடம் 5 வயதிலிருந்து குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும் உள்ளன.


பூஸ்டர் தடுப்பூசி



ஒவ்வொரு நாளும் இந்தப் புதிய வகைப் பற்றி மேலும் அறிந்து வருகிறோம். நாங்கள் அறியும் தகவலை அமெரிக்க மக்களுடன் நேர்மையாகவும், உடனடியாகவும் பகிர்ந்து கொள்வோம். 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் ஜூன் மாதத்திற்கு முன் 2 தடுப்பூசி பெற்றிருந்தால் காத்திருக்காமல் பூஸ்டர் தடுப்பூசி போடுங்கள். பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுங்கள். அது உங்களையும், உங்கள் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்கும். மக்கள் தடுப்பூசி போட்டு, முகக்கவசம் அணிவதை கடைப்பிடித்தால் ஊரடங்கு தேவைப்படாது. இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
30-நவ-202123:18:28 IST Report Abuse
Mohan அப்படியெல்லாம் சொல்லப்படாது. அப்பறம் மயான கிடங்கு தேவைப்படும்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-நவ-202123:07:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஊரடங்கு போட்டாலும் அங்கே இருக்குற முக்காவாசி பைத்தியங்க அடங்க மாட்டானுவ.. அதான் நைசா ஜகா வாங்குறதை காட்டிக்காம ஜகா வாங்குறாரு..
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
30-நவ-202120:57:21 IST Report Abuse
தமிழன் அமெரிக்காவுல முதல் மற்றும் இரண்டாம் அலையில் மக்கள் செத்துக்கிட்டிருந்தப்பவே ஊரடங்க அமல் படுத்த படாத பாடு பட்டீங்க. இனிமே எந்த வைரஸ் வந்தாலும் ஊரடங்கிற்கு வாய்ப்பே இல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X