பொது செய்தி

இந்தியா

கிரிப்டோகரன்சி தடை மசோதா விரைவில் தாக்கல்: நிதி அமைச்சர்

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்வதற்கான மசோதா விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.தனியார் கிரிப்டோகரன்சிகளை தடை செய்வதற்கான மசோதா, நடப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.இது தொடர்பாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு
கிரிப்டோகரன்சி,மசோதா, நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்வதற்கான மசோதா விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தனியார் கிரிப்டோகரன்சிகளை தடை செய்வதற்கான மசோதா, நடப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.

இது தொடர்பாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கம்: கிரிப்டோகரன்சி தடை செய்வதற்கான மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின்னர், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். முன்பு உருவாக்கப்பட்ட மசோதா, பார்லிமென்டில் விவாதத்திற்கு கொண்டு வர முயற்சி செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு விஷயங்கள் ஆலோசனையில் வந்ததால், புதிய மசோதாவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த மசோதாவை, நடப்பு கூட்டத்தொடரில், விரைவில் தாக்கல் செய்யப்படும்.


latest tamil news


கிரிப்டோகரன்சிகள் இந்தியாவில் முறைப்படுத்தவில்லை. இதனால், கிரிப்டோகரன்சியில் நடக்கும் பரிமாற்றங்கள் குறித்து தகவல் சேகரிக்கவில்லை. இந்த மெய்நிகர் நாணயங்கள் மீதான அதிக அபாயம் குறித்து செபி, ரிசர்வ் வங்கியும் மக்கள் இடையே எச்சரிக்கை விடுப்பதுடன், விழிப்புணர்வையும் எடுத்து வருகின்றன. கிரிப்டோகரன்சி குறித்து மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை தடை செய்வது தொடர்பாக, விளம்பர தர கவுன்சில் விதிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-நவ-202123:06:17 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை தடை செய்வது தொடர்பாக, விளம்பர தர கவுன்சில் விதிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.// குட்கா தயாரிக்க தடை இல்லை. ஆனா குட்கா விக்க தடை.. அது மேரீ ..
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் இவங்க AIADMK பார்டர் போட்ட சாரியில் எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-நவ-202123:04:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஆடீம்கா கொள்ளையில் கமிஷன் காசில் வாங்கி கொடுத்தது...
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
30-நவ-202117:59:38 IST Report Abuse
Samathuvan ஏற்கெனவே கையில் நாம் காணக்கூடிய பணத்தை வரியின் பேரில் எல்லாத்தையும் புடுங்கியாச்சு. இப்படி கண்ணாலேயே பார்க்கமுடியாத பணத்தை கொடுத்து மக்களை இன்னும் பரதேசி ஆக்கணுமா?
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202122:32:58 IST Report Abuse
Kasimani Baskaran"வரியின் பேரில் எல்லாத்தையும் புடுங்கியாச்சு" - பன்னீர் அளவுக்காவது வரி கட்டியிருக்கிறீரா? இல்லை டீமானிட்டைசேசனில் பிரச்சினையா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X