காட்டெருமையை தாக்கும் நபர் : வைரலாகும் வீடியோ

Added : நவ 30, 2021 | கருத்துகள் (1)
Advertisement
குன்னுார் : குன்னுார் கேத்தியில் காட்டெருமையை ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி சாலை, தனியார் கல்லூரி அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டெருமையை ஒருவர் ஒருவர் கம்பால் தாக்கினார். அந்த நபரை காட்டெருமை தாக்க முற்பட்டது. எனினும் அடித்ததால், அங்கிருந்து திரும்பிய காட்டெருமை குழியில் சிக்கி கால் பாதித்த நிலையில்
 காட்டெருமையை தாக்கும் நபர்  : வைரலாகும் வீடியோ

குன்னுார் : குன்னுார் கேத்தியில் காட்டெருமையை ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி சாலை, தனியார் கல்லூரி அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டெருமையை ஒருவர் ஒருவர் கம்பால் தாக்கினார். அந்த நபரை காட்டெருமை தாக்க முற்பட்டது. எனினும் அடித்ததால், அங்கிருந்து திரும்பிய காட்டெருமை குழியில் சிக்கி கால் பாதித்த நிலையில் ஓட்டம் பிடித்தது.

இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வீடியோ எடுத்ததுடன், காட்டெருமை தாக்கும் நபரை கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளத்தில் வீடியோவை பரப்பினர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உதவி வனபாதுகாவலர் சரவணன் கூறுகையில், " இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-டிச-202110:48:30 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan stupid guy's ..you only occupied their land .. come and eat some grass ..what is your problem ..help to animals, if don't want to help leave it ..don't disturb..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X