பொது செய்தி

இந்தியா

வந்தே பாரத் விமான சேவை: 15.76 லட்சம் தமிழர்கள் பயணம்!

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 15 லட்சத்து, 76 ஆயிரத்து, 213 பேர் பயணம் செய்துள்ளனர்,'' என விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்தார்.ராஜ்யசபாவில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது: உலகளாவிய கோவிட் பெருந்தொற்றின் போது, வெளிநாடுகளில் இருந்த இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்கும், இந்தியாவில் இருந்து
Vande Bharat, Airlines, 15.76 Lakh, Tamil Member ​​Travel, 
Union Home Minister, VK Singh, வந்தே பாரத், விமான சேவை, 15.76 லட்சம், தமிழர்கள், பயணம்,

புதுடில்லி: ‛‛வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 15 லட்சத்து, 76 ஆயிரத்து, 213 பேர் பயணம் செய்துள்ளனர்,'' என விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்தார்.


latest tamil news


ராஜ்யசபாவில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது: உலகளாவிய கோவிட் பெருந்தொற்றின் போது, வெளிநாடுகளில் இருந்த இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்கும், இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பயண வசதிகளை வழங்குவதற்கும் ‛வந்தே பாரத்' இயக்கத்தை இந்திய அரசு மேற்கொண்டது. 2021 அக்.,31ம் தேதி நிலவரப்படி, வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் 2 லட்சத்து,17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டன. 1.83 கோடி பயணிகள் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை 15 லட்சத்து, 76 ஆயிரத்து, 213 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 6 லட்சத்து, 70 ஆயிரத்து, 368 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். 9 லட்சத்து 5,845 பேர் தமிழகம் வந்துள்ளனர்.


latest tamil news


கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளில் பதினெட்டு விமான நிலையங்கள், ஹெலிபேடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள நெய்வேலியும் அடங்கும். மேலும் 123 வான் வழித்தடங்கள் 2020-21ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. கர்னுாலில் இருந்து சென்னை, சென்னையில் இருந்து கர்னுாலும் இவற்றில் அடங்கும்.

அடுத்த ஐந்து ஆண்டில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-202122:18:03 IST Report Abuse
Selva ஏதோ இலவசமாக அழைத்து வந்த மாதிரி பீற்றிக் கொள்கிறார்கள். இரண்டு மடங்குக்கும் மேலாக டிக்கட் கட்டணம் கட்டி "வந்தேபாரத்" மூலம் இந்தியா திரும்பிய இந்த 15.76 லட்சம் தமிழர்களில் நானும் ஒருவன். கடந்த இரண்டு வருடங்களில் ஏர்இந்தியாவின் நஷ்டத்தை வெகுவாகக் குறைத்த பெருமை இந்த "வந்தேபாரத்" திட்டத்திற்கு உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X