கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்கக் கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: சட்டவிரோத பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என்றும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தவிர்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற
ChennaiHC, Banner, Order, Tamilnadu, சென்னை, உயர்நீதிமன்றம், பேனர், விதிமுறை, நடவடிக்கை, உத்தரவு

சென்னை: சட்டவிரோத பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என்றும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தவிர்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் இன்று (நவ.,30) விசாரணைக்கு வந்தது. அப்போது பேனர் வைப்பதில் விதிமீறி செயல்படுபவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி விளக்கமளித்தது. தொடர்ந்து தி.மு.க வழக்கறிஞர், முதல்வர் பதவியேற்றபோது கூட பேனர்கள் வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதாக வாதிட்டார்.


latest tamil news


பின்னர் நீதிபதிகள் கூறுகையில், 'சட்டவிரோத பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆளுங்கட்சி மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறோம். பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் என கூறுவது மட்டும் போதாது; கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது,' என தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
30-நவ-202123:14:00 IST Report Abuse
Mohan வீதியிலே பேனரே கூடாதுங்குறேன், விதி சதின்னு.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
30-நவ-202121:35:37 IST Report Abuse
jayvee Last year no banner no permission.. Same court this year.. No permission no banner.. What a change my lords
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
30-நவ-202120:50:39 IST Report Abuse
SUBBU எங்க ஊர் மதுரையில் வந்து பாருங்கள் கணம் நீதிபதி அவர்களே. எங்கு பாத்தாலும் உதயநிதி ஸ்டாலின் போஸ்டர்கள் மற்றும் கட் அவுட்கள்.அதை கூட பொறுத்துக் கொள்ளலாம்.அதுல அவிங்க போட்ற அடை மொழி இருக்கே அதைத்தான் தாங்க முடியல.அதுலயும் மதுரைக் கார திமுக கொத்தடிமைகளின் அலப்பறை சொல்லி மாளாது.ஒண்ணு ரெண்டு எடுத்துக் காட்டுக்கு,தமிழகத்தின் இருளை போக்க வந்த உதய் சூரியனே.வருங்கால முதலமைச்சரே, எங்களின் விடி வெள்ளியே, கயவர்களை கருவறுத்த கருணாநியின் பேரனே என்று இன்னும் இது போல நெறய. இதெல்லாம் முன்பு அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கு சூட்டப் பட்ட பட்டங்கள். இப்ப அவர்தான் டம்மியாக்கப் பட்டு விட்டாரே.திமுகவின் அராஜகம் மதுரையில் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.இது எங்கு போய் முடியுமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X