ஒமைக்ரான் தாக்கத்தால் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்துவது சவால்: சீன வெளியுறவுத்துறை

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பெய்ஜிங்: ‛‛ஒமைக்ரான் தாக்கத்தால் அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சீன அரசு பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும்,'' என, சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.வரும் 2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் நடைபெற உள்ளன. சீனாவின் ஹுபே மாகாணத்தில் வரும் பிப்ரவரி 4ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்
Challenge, hosting, Winter, Olympics, impact, omega, Chinese, Foreign Ministry, ஒமைக்ரான், தாக்கம், குளிர்கால ஒலிம்பிக், போட்டி, சவால், சீன வெளியுறவுத்துறை,

பெய்ஜிங்: ‛‛ஒமைக்ரான் தாக்கத்தால் அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சீன அரசு பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும்,'' என, சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

வரும் 2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் நடைபெற உள்ளன. சீனாவின் ஹுபே மாகாணத்தில் வரும் பிப்ரவரி 4ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. கடைசியாக 2008ம் ஆண்டு சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.


latest tamil news


கோடை காலத்தில் நான்காண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டி, ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் உள்ளடங்கியது.

இந்நிலையில், குளிர் காலத்தில் மட்டுமே விளையாடக்கூடிய ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட குளிர் காலநிலை மற்றும் பனியால் ஆன தரை தளம் தேவைப்படும் விளையாட்டுக்காக நான்காண்டுக்கு ஒரு முறை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 1924ம் ஆண்டு துவங்கி பல்வேறு நாடுகளில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்திவருகிறது.

முன்னதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்தன. அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி முதல் 20ம் தேதி வரை சீனாவின் ஹுபே மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கு தற்போது சீன அரசு ஆயத்தமாகி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமைக்ரான் என்கிற வைரஸ் ரகம் வரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜோ லீஜியான் தெரிவித்துள்ளதாவது: ஒமைக்ரான் பரவும் அச்சம் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கேள்விக்குள்ளாகி உள்ளது. ஒமைக்ரான் அச்சம் காரணமாக குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதில் சீன அரசுக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
30-நவ-202119:52:58 IST Report Abuse
jay நீயும் வேண்டாம் உன் மூஞ்சி ஒலிம்பிக் வேணாm
Rate this:
Cancel
jay - toronto,கனடா
30-நவ-202119:51:57 IST Report Abuse
jay யார் தான் சீனா பக்கம் போவாங்கல்
Rate this:
Cancel
jay - toronto,கனடா
30-நவ-202119:51:18 IST Report Abuse
jay அயோக்கிய பயலே நீ தான் எல்லாத்தையும் உருவாக்கி போட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி நடிக்கிறே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X