அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவிட் கட்டுப்பாடு விதிமுறைகள் டிச. 15வரை நீட்டிப்பு: ஸ்டாலின்

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கோவிட் கட்டுப்பாடு விதிமுறைகளை டிச. 15 வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல கட்டங்களாக பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (நவ. 30) முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு,தமிழகத்தில் கோவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகள் வரும் டிச. 15 வரை
 கோவிட் கட்டுப்பாடு விதிமுறைகள்  டிச. 15வரை நீட்டிப்பு: ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் கோவிட் கட்டுப்பாடு விதிமுறைகளை டிச. 15 வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல கட்டங்களாக பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (நவ. 30) முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு,
தமிழகத்தில் கோவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகள் வரும் டிச. 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆந்திர, கர்நாடகாவை தொடந்து கேரளாவிற்கு பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு அல்லது கிரிமி நாசினி கொண்டு கழுவுவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
30-நவ-202121:32:22 IST Report Abuse
jayvee December 2022? Thalivaaaaaa
Rate this:
Cancel
30-நவ-202120:37:18 IST Report Abuse
ஆரூர் ரங் இவருதானே முதலில் இந்தியத் தடுப்பூசி பற்றி சந்தேகத்துடன்👹 பேசியது? அதனால்தான் இன்னும் ஒரு கோடி பேர் போட்டுக் கொள்ள தயங்குகிறார்கள். பொறுப்பற்ற ஒருவரின் பேச்சை யார் கேட்டு நடப்பர்? இப்போதுள்ள நிலைமையில் துப்பாக்கி😡 முனையிலாவது போட்டாக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இவருக்கு அதனை செயல்படுத்தும் மன உறுதி அறவே கிடையாது . இன்னும் தயங்கினால் டிஸ்மிஸ் மட்டுமே ஒரே வழி. ஒழியட்டும் இந்த வைரஸ் ஆட்சி
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
30-நவ-202120:21:33 IST Report Abuse
sankar "தமிழகத்தில் கோவிட் கட்டுப்பாடு விதிமுறைகளை டிச. 15 வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" - அதாவது இல்லாத ஒன்றுக்கு நீட்டிப்பு - சர்வேஸ்வரனுக்கு தோத்திரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X