பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : நவ 30, 2021
Share
Advertisement
டிச., 1, 1990உ.பி., மாநிலம் அலகாபாதில், 1900 ஆக., 18ல் மோதிலால் நேரு, ஸ்வரூப ராணி தம்பதிக்கு மகளாக பிறந்தவர், விஜயலட்சுமி பண்டிட்; இயற்பெயர், ஸ்வரூப் குமாரி. நாட்டின் முதல் பிரதமர் நேருவின் தங்கை. சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று, சிறை வாசம் அனுபவித்தார். உ.பி.,யில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டிலேயே முதல் பெண் மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.இந்தியாவின்

இதே நாளில் அன்று


டிச., 1, 1990



உ.பி., மாநிலம் அலகாபாதில், 1900 ஆக., 18ல் மோதிலால் நேரு, ஸ்வரூப ராணி தம்பதிக்கு மகளாக பிறந்தவர், விஜயலட்சுமி பண்டிட்; இயற்பெயர், ஸ்வரூப் குமாரி. நாட்டின் முதல் பிரதமர் நேருவின் தங்கை. சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று, சிறை வாசம் அனுபவித்தார். உ.பி.,யில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டிலேயே முதல் பெண் மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.இந்தியாவின் துாதுவராக பல நாடுகளிலும், ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை ஆணையத்திலும் பணியாற்றியவர். 1962 - 1964 வரை, மஹாராஷ்டிரா மாநில கவர்னராக இருந்தார். ஆங்கிலத்தில் சில நுால்களும் எழுதியுள்ளார்.பிரதமர் இந்திரா அமல்படுத்திய, அவசர நிலையை கடுமையாக எதிர்த்ததால், 1977ல் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு பறிபோனது. அதன்பின், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். 1990 டிச., 1ல் தன் 90வது வயதில் இயற்கை எய்தினார்.
விஜயலட்சுமி பண்டிட் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X