சில வரி செய்திகள்...: இ்ந்தியா

Added : நவ 30, 2021
Share
Advertisement
கடற்படை தளபதி பொறுப்பேற்பு புதுடில்லி: கடற்படை தளபதியாக இருந்த கரம்பீர் சிங், சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, கடற்படை மேற்கு பிரிவின் தலைமை கமாண்டிங் அதிகாரி ஆர்.ஹரிகுமார், புதிய கடற்படை தளபதியாக நேற்று பொறுப்பேற்றார். கடற்படை நிர்வாக பிரிவில் 1983ல் பொறுப்பேற்ற இவர், விமானம் தாங்கி கப்பல் ஐ.என்.எஸ்., விராட்டின் தலைமை பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை
 சில வரி செய்திகள்...: இ்ந்தியா

கடற்படை தளபதி பொறுப்பேற்பு

புதுடில்லி: கடற்படை தளபதியாக இருந்த கரம்பீர் சிங், சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, கடற்படை மேற்கு பிரிவின் தலைமை கமாண்டிங் அதிகாரி ஆர்.ஹரிகுமார், புதிய கடற்படை தளபதியாக நேற்று பொறுப்பேற்றார். கடற்படை நிர்வாக பிரிவில் 1983ல் பொறுப்பேற்ற இவர், விமானம் தாங்கி கப்பல் ஐ.என்.எஸ்., விராட்டின் தலைமை பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சிறப்பான பணிக்காக 'பரம் விஷிஸ்ட் சேவா' உட்பட பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.

கள்ளச்சாராயம்: 2 பேர் பலி
திருச்சூர்: கேரளாவின் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா கிராமத்தை சேர்ந்தவர்கள் பிஜு மற்றும் நிஷாந்த். நண்பர்களான இருவரும், சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்தனர். வாயில் நுரையுடன் மயங்கி விழுந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிஜு நேற்று முன்தினம் இரவும், நிஷாந்த் நேற்றும் பலியாயினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பரம்வீர் சிங் மீதான 'வாரன்ட்' ரத்து
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் உள்ளிட்டோர் மிரட்டி பணம் பறித்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் ஷியாம் சுந்தர் புகார் செய்தார். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான பரம்வீர் சிங்கிற்கு எதிராக, நீதிமன்றம் பிடி வாரன்ட் பிறப்பித்தது. இதற்கிடையே பரம்வீர் சிங்கை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து, சமீபத்தில் அவர் போலீஸ் முன் ஆஜரானார். இதனால் அவர் மீதான வாரன்ட், மும்பை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
தேசிய குடிமக்கள் பதிவேடு
புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ராஜ்யசபாவில் நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், 'குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த ஆண்டு ஜன., 10ல் அமலாகி உள்ளது. இருப்பினும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிப்பது குறித்து அரசு தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என, கூறி உள்ளார்.

நடிகையை மிரட்டியவர் கைது
கோல்கட்டா: பெங்காலி திரைப்படம் மற்றும் 'டிவி' தொடர் நடிகை அருனிமா கோஷ், மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் வசிக்கிறார். இவரது வீட்டிற்கு சமீபத்தில் சென்று கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் கைது செய்தனர். 'கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகைக்கு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ள அவர், ஏற்கனவே இரு முறை கைதாகி உள்ளார்' என, போலீசார் தெரிவித்தனர்.

பன்றியை விரட்டியவர் சுட்டுக்கொலை
வயநாடு: கேரளாவின் வயநாடு மாவட்டம் கம்பளக்காடு அருகே, வயலில் பயிர்களை நாசமாக்கும் காட்டுப்பன்றிகளை விரட்ட ஜெயன், 36, உறவினர் ஷருண் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சென்றனர். இவர்களில் ஜெயன் துப்பாக்கி குண்டு பாய்ந்து வயலில் இறந்து கிடந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஷருண் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். வேட்டைக்கு வந்த சிலர் அவர்களை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது; போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X