இந்தியா

விஜய் மல்லையாவுக்கு ஜன., 18ல் தண்டனை

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி ;நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ள விஜய் மல்லையாவுக்கான தண்டனை விபரம், வரும் ஜன., 18 ல் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள அவரை,
விஜய் மல்லையா, ஜன., 18ல், தண்டனை

புதுடில்லி ;நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ள விஜய் மல்லையாவுக்கான தண்டனை விபரம், வரும் ஜன., 18 ல் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.


latest tamil news



விஜய் மல்லையா 2017ல் 'டியாஜியோ' நிறுவனத்திடம் பெற்ற 2.80 கோடி ரூபாயை தன் மகன் சித்தார்த் மற்றும் மகள்களுக்கு வழங்கி உள்ளார்.இது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்பதால், விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என தீர்ப்பளிக்கப் பட்டது.

வழக்கில் மல்லையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அவருக்கான தண்டனை மீதான விசாரணை மட்டும் இன்னும் முடியவில்லை. நீதிமன்றத்தில் மல்லையா ஆஜராக போதிய அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. இனியும் காத்திருக்க முடியாது.அதனால் மல்லையாவுக்கு வழங்கப்படும் தண்டனை மீதான விசாரணை, வரும் ஜன., இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்டு,18 ல் தீர்ப்பு வெளியாக உள்ளது..

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
30-நவ-202123:52:29 IST Report Abuse
DARMHAR மகா எத்தனாச்சே எப்படியும் நீதியின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்வான்.
Rate this:
Cancel
Roy -  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-202123:27:54 IST Report Abuse
Roy Which January???
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-நவ-202123:18:06 IST Report Abuse
Natarajan Ramanathan விஜய் மல்லையாவின் வங்கி கடன்கள் மட்டுமே அனேகமாக முழுவதுமாகவே திரும்பி வசூலாகிவிட்டன. கடன்கள் வழங்க காரணமாயிருந்த கிங்பின் இன்றுவரை வாய்க்கொழுப்போடு சுதந்திரமாக அலைகிறான். அவனை பிடித்து உள்ளே வைத்தால்தான் மற்ற அனைவரும் வெளியே வருவார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X