குடியரசு நாடாக மாறியது பார்படாஸ்:முடிந்தது எலிசபெத் தலைமை

Added : நவ 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சான் ஜூவான் :வட அட்லாண்டிக்கைச் சேர்ந்த பார்படாஸ் தீவு, குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.வட அமெரிக்கா அருகே உள்ள கரீபியன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த பார்படாஸ், 1966, நவ.,30ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. எனினும் பிரிட்டன் அரசி எலிசபெத் தலைமையில் சுதந்திரமான காமன்வெல்த் நாடாக செயல்பட்டு வந்தது.கடந்த 2008ல் பார்படாஸ், குடியரசு நாடாக மாறுவது குறித்து பொது
குடியரசு நாடு, பார்படாஸ், முடிந்தது, எலிசபெத், தலைமை

சான் ஜூவான் :வட அட்லாண்டிக்கைச் சேர்ந்த பார்படாஸ் தீவு, குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

வட அமெரிக்கா அருகே உள்ள கரீபியன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த பார்படாஸ், 1966, நவ.,30ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. எனினும் பிரிட்டன் அரசி எலிசபெத் தலைமையில் சுதந்திரமான காமன்வெல்த் நாடாக செயல்பட்டு வந்தது.கடந்த 2008ல் பார்படாஸ், குடியரசு நாடாக மாறுவது குறித்து பொது ஓட்டெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் பின்னர் தள்ளிப் போடப்பட்டது.கடந்த ஆண்டு அரசியல் ரீதியிலான முடியாட்சி முடிவுக்கு வர உள்ளதாக பார்படாஸ் அறிவித்தது.


latest tamil news



இதைத் தொடர்ந்து தேசிய விடுதலை வீரர்கள் நினைவு சதுக்கத்தில் இருந்து பிரிட்டன் துணை அட்மிரஸ் ஹோராடியோ நெல்சன் சிலை அகற்றப்பட்டது.கடந்த அக்., பார்படாஸ் பார்லி., முதன் முறையாக அதிபர் பதவிக்கு, கவர்னர் ஜெனரல் சாண்ட்ரா மேசன், 72, என்ற முன்னாள் நீதிபதியை தேர்வு செய்தது.இந்நிலையில் இன்று (நவ.30) பார்படாஸ் தீவின் 55 வது சுதந்திர தின விழாவும், குடியரசு நாடாக பிரகடனப்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்தன.

நெல்சன் சிலை அகற்றப்பட்ட விடுதலை வீரர்கள் நினைவு சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி 'டிவி' வாயிலாக உலகம் முழுதும் ஒளிபரப்பியது. குடியரசு நாடு அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன.
பார்படாஸ் குடியரசு நாடானதை அடுத்து, இதுவரை அந்த நாட்டுக்கு தலைவராக இருந்து வந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் தலைமை முடிவுக்கு வந்துள்ளது.இன்று (நவ.30) பார்படாஸ் அதிபராக சாண்டரா மேசன் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பார்படாசில் மூன்று லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த நாடு சுற்றுலா வருவாயை பெரிதும் சார்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-நவ-202123:12:58 IST Report Abuse
Natarajan Ramanathan விரைவில் இங்கிலாந்தும் முடியாட்சி துறந்து குடியரசாக மலர வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X