சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பேப்பர் பொம்மைகளை செய்கிறேன்!

Added : நவ 30, 2021 | |
Advertisement
'பேப்பர் குயிலிங்' எனப்படும், பேப்பரை மடித்து, ஒட்டி பொம்மை களை உருவாக்கி, அதன் வாயிலாக சம்பாதிக்கும் அனுராதா ராம்நாத்: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பிறந்து வளர்ந்தவள் நான். தற்போது, சென்னை வளசரவாக்கத்தில் குடும்பத்தோடு வசிக்கிறேன்.ஆரம்பத்தில் என் பிள்ளைகளின் பள்ளிக்கூட, 'புராஜெக்ட்' வேலைகளுக்காக இணையத்தை பார்த்து பூக்கள், செடி, கொடிகள், சிறிய கட்டடங்கள்
சொல்கிறார்கள்

'பேப்பர் குயிலிங்' எனப்படும், பேப்பரை மடித்து, ஒட்டி பொம்மை களை உருவாக்கி, அதன் வாயிலாக சம்பாதிக்கும் அனுராதா ராம்நாத்: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பிறந்து வளர்ந்தவள் நான். தற்போது, சென்னை வளசரவாக்கத்தில் குடும்பத்தோடு வசிக்கிறேன்.ஆரம்பத்தில் என் பிள்ளைகளின் பள்ளிக்கூட, 'புராஜெக்ட்' வேலைகளுக்காக இணையத்தை பார்த்து பூக்கள், செடி, கொடிகள், சிறிய கட்டடங்கள் போன்ற பொம்மைகளை செய்து கொடுக்கத் துவங்கினேன்.பின் வீடுகளில் கொலு நிகழ்வில் பங்கேற்ற போது அங்கு வைக்கப்பட்டிருந்த பொம்மைகளைப் பார்த்து தான், 'ஏன் நாமும் பொம்மைகள் செய்யக் கூடாது...' என்ற எண்ணம் எழுந்தது.வழக்கமான சுவாமி உருவங்களையே கொலுக்களில் வைக்கின்றனர்; ஆனால், நான் அதிலிருந்து மாறுபட நினைத்தேன். என் அமெரிக்க சினேகிதி ஒருவர் எனக்கு நிறைய யோசனைகள் சொல்லி ஊக்குவித்தார். அப்படி ஆரம்பித்தது தான், 'பேப்பர் குயிலிங்' பொம்மை தயாரிப்பு.கொரோனா துவங்கியதில் இருந்து வீட்டில் எனக்கு நிறைய நேரம் கிடைத்ததால், விதவிதமான பொம்மைகளை, ரசனைக்கு ஏற்றவாறு பொறுமையாகவும், நிதானமாகவும் தயாரிக்க முடிந்தது.ஒரு பொம்மை செய்வதற்கு எனக்கு மூன்று மணி நேரம் பிடிக்கும். வீட்டில் கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செய்வேன்.நுட்பமான பொம்மைகளைச் செய்ய சில சமயங்களில் இரண்டு மூன்று நாட்கள் கூட பிடிக்கும். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற 'வீடியோ'க்களை பார்த்து, இந்த பொம்மைகளை அழகுற செய்வது எப்படி என்பதை மேலும் கற்றுக் கொண்டேன்.

சமீபத்தில், ஒரு ஆர்ட் சென்டரில் மூன்று தினங்கள் என் பொம்மைகளைக் காட்சிக்காக வைத்திருந்தேன்; நான் நினைத்ததை விட பொம்மைகள் அதிக அளவில் விற்பனையாகின.அதிக லாபம் வைத்து விற்கவில்லை. தயாரிப்புச் செலவு, உழைப்புக்கு எடுத்துக் கொள்ளும் நேரம், மிகக் குறைவான லாபம் இவற்றை கணக்கிட்டு விலையை நிர்ணயம் செய்தேன்.இந்த பொம்மைகளின் பின்னால் காந்தம் பொருத்தி, விற்பனை செய்வது ஒரு கூடுதல் சிறப்பு.வீட்டு ஹாலின் சுவர், குளிர்சாதனப் பெட்டியின் வெளிப்புறம், வாஷிங்மெஷின், அதற்கு மேல் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற இடங்களில் அவற்றை பொருத்தி வைக்கலாம்.

இப்படி வெரைட்டியாக செய்வதால், 'கஸ்டமர்கள்' தேடி வருகின்றனர்.கணவரும், குழந்தைகளும் கலை ஆர்வத்துக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கின்றனர். நான் செய்த பொம்மைகளின் புகைப்படங்களை ஆன்லைனில், 'டிஸ்ப்ளே' செய்தேன்.அவை வெளிநாட்டினரை ஈர்த்து, அது குறித்து விசாரிப்பதோடு, சிலர் வாங்கவும் செய்கின்றனர். இந்தப் பொம்மைகளை செய்து விற்கும் பணியைத் துவக்கி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன; வருமானமும் வருகிறது!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X