ஒமைக்ரான்'பரவலை தடுக்க தொற்று பரிசோதனையை அதிகரிக்க மாநிலங்களுக்கு உத்தரவு!

Updated : டிச 02, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (3)
Advertisement
புதுடில்லி :'ஒமைக்ரான்' என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், மத்திய சுகாதாரத் துறை செயலர் இது குறித்து நேற்றுஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படி மாநில அரசுகளை அவர்வலியுறுத்தினார். இதற்கிடையில், ''நம் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் இதுவரை
தொற்று பரிசோதனை,அதிகரிக்க மாநிலங்கள்,..உத்தரவு!

புதுடில்லி :'ஒமைக்ரான்' என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், மத்திய சுகாதாரத் துறை செயலர் இது குறித்து நேற்றுஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படி மாநில அரசுகளை அவர்வலியுறுத்தினார்.

இதற்கிடையில், ''நம் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் இதுவரை பரவவில்லை,'' என, மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை தாக்கத்தால், உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தியா உட்பட பல நாடுகள் கொரோனா தாக்கத்திலிருந்து தற்போது தான் மீண்டு வருகின்றன.
இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் அறிகுறியற்ற கொரோனா தொற்று சமீபத்தில் அதிகரிக்க துவங்கியது. பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 'பி.1.1.529' என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு, ஒமைக்ரான் என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுஉள்ளது.


latest tamil news



பெரும் அச்சம்



இது வேகமாக பரவும் தன்மை உடையதாகவும், தடுப்பூசியின் செயல்திறனுக்கு கட்டுப்படாமல் போக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இந்த வைரஸ் தற்போது ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மனி, இஸ்ரேல், நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா உட்பட பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், புதிய உருமாறிய வைரஸ் பரவல், உலக நாடுகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, பல நாடுகள் தங்கள் நாட்டுக்கு வெளிநாட்டு பயணியர் வர தடை விதித்துள்ளன. இதற்கிடையில், தென் ஆப்ரிக்காவிலிருந்து மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள தானேவுக்கு வந்த ஏழு பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் நான்கு பேருக்கு பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டது. மற்ற மூன்று பேரின் சோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை.


latest tamil news




ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகளுடன், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் கூறியதாவது: கொரோனா பரிசோதனையில் அலட்சியம் காட்டாமல் தீவிரப்படுத்த வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர்., மற்றும் ஆர்.ஏ.டி., பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். இதில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கண்டுபிடித்து விட முடியும். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியர் அனைவரையும் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றில் வெளிநாட்டு பயணியர் வருகையை கண்காணிக்க வேண்டும். தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால், ஒமைக்ரான் பரவலை தடுத்து விட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:நம் நாட்டில் இதுவரை ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஒமைக்ரான் வைரசை எதிர்த்து போராட, அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளோம்.
இந்த வைரஸ் இந்தியாவிற்குள் ஊடுருவாமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம். அனைத்து மாநிலங்களுடனும் தொடர்பில் உள்ளோம். உலகில் ௧௪ நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


கட்டுப்பாடு நீட்டிப்பு



மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கொரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகள், டிச., ௩௧ வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. ஒமைக்ரான் பரவலை தடுக்க, வெளிநாட்டு பயணியரை கண்காணிப்பது பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முழுமையாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
01-டிச-202112:12:20 IST Report Abuse
Samathuvan நம்மதான் இதுவரை கிஸ்ஸான், நிசான், ஆயுஷ்மான், ஹர், கர், ஜல்லு, உஜ்வாலா, குஜாலா, யோஜனா, போஜனா ன்னு அடிச்சுவிட்டுக்கிட்டு இருந்தோம். இவனுக என்னடானா நமக்கு மேலயே இருப்பானுவோ போல, ஒருத்தன் ஓமிக்கிரானுங்கறான், இன்னொருத்தன் டொமிக்கிறானுங்கறான் ஒண்ணுமே புரியல. நம்ம பிளைட் வாங்குன சமயமே சரியில்லை, எங்கேயுமே ஊர் சுத்த முடியலே. முதலில் நாலு எலுமிச்சை பழத்தை வாங்கி நாலு வீலுல்ல வைச்சு பூஜை போட சொல்லணும்.
Rate this:
Cancel
01-டிச-202106:29:51 IST Report Abuse
அப்புசாமி என்ன செய்யப் போறீங்கன்னு கேட்ட உச்சநீதி மன்றம் இந்த செய்தியைப் படிக்கும் என நம்புவோம்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-டிச-202106:28:33 IST Report Abuse
Kasimani Baskaran தடுப்பூசியை ஆப்பிரிக்கா மீது தினிக்கும் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியான சீன வைரஸின் புதிய கற்பனை வடிவம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X