எம்.பி.,க்கள் 12 பேர் 'சஸ்பெண்ட்' ரத்தில்லை : வெங்கையா திட்டவட்டம்

Updated : டிச 02, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி :''பார்லிமென்டில் ரகளையில் ஈடுபட்ட 12 எம்.பி.,க்களை 'சஸ்பெண்ட்' செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற முடியாது,'' என, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம்
எம்.பி.,க்கள் 12 பேர், 'சஸ்பெண்ட்' ரத்தில்லை : வெங்கையா

புதுடில்லி :''பார்லிமென்டில் ரகளையில் ஈடுபட்ட 12 எம்.பி.,க்களை 'சஸ்பெண்ட்' செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற முடியாது,'' என, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது ராஜ்யசபாவில் ரகளையில் ஈடுபட்டு, மேஜைகள் மீது ஏறி கோஷமிட்ட 12 எம்.பி.,க்களை, நடப்பு கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நேற்று முன்தினம் நிறைவேறியது.


விதிகளுக்கு எதிரானதுஇதில் ஆறு பேர் காங்.,கைச் சேர்ந்தவர்கள். திரிணமுல் காங்., மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த தலா இரண்டு பேர், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.இந்நிலையில் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான நேற்று ராஜ்யசபா அலுவல் துவங்கியதும், இந்தப் பிரச்னையை காங்.,கைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பினார். அவர் பேசியதாவது:கடந்த கூட்டத் தொடரில் நடந்த சம்பவத்துக்கு தற்போது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? மேலும், சஸ்பெண்ட் செய்யப்படும் எம்.பி.,க்களின் பெயர்களையும் சபையில் குறிப்பிடவில்லை. இது, சபையின் சட்ட விதிகளுக்கு எதிரானது.

இவர்கள் மீதான நடவடிக்கையை கைவிடும்படி, சபை தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம், எதிர்க்கட்சிகள் சார்பில் நேரில் வலியுறுத்தப்பட்டது. அவர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு பதிலளித்து வெங்கையா நாயுடு கூறியதாவது:கடந்த ஆகஸ்டில் நடந்த கூட்டத்தின்போது சபையை நீங்கள் அவமதித்துள்ளீர்கள். சபையில் கோஷமிட்டு, அமளி ஏற்படுத்தி முடக்கியுள்ளீர்கள். சிலர் மேஜைகளின் மீது ஏறி அவமதித்துள்ளனர். இவ்வளவும் செய்துவிட்டு, எங்களுக்கு பாடம் எடுக்கிறீர்களா?


குறிப்புகளில் பதிவுநான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை. சபையை முறையாக, ஒழுங்காக நடத்த வேண்டும் என்பதே என் நோக்கம். உறுப்பினர்களும் அதை உணர்ந்து செயல்பட வேண்டும். இங்கு போராட்டம் நடத்திவிட்டு வெளியே சென்று, நாங்கள் ஏதோ தவறு செய்தது போல் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கின்றனர்.உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக நடந்துள்ளனர். அவர்களது பெயர்களை அப்போதே, சபையை நடத்திய துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அது, பார்லிமென்ட் குறிப்புகளில் பதிவாகியுள்ளது.ராஜ்யசபா என்பது தொடர்ந்து செயல்படும் அமைப்பு. அதனால், முந்தைய அமர்வுகளில் நடந்தவற்றுக்கு எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்க முடியும்.


வெளிநடப்புசஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் தலைவரான என்னால் கொண்டு வரப்பட்டதல்ல; இந்த சபையால் முன்வைக்கப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த முடிவு இறுதியானது. எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை பரிசீலனைக்கு உகந்ததல்ல. அதனால், சஸ்பெண்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்யப் போவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, காங்., - தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறிது நேரம் கோஷமிட்டு, வெளிநடப்பு செய்தனர். சற்று நேரம் கழித்து, திரிணமுல் காங்., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.இதைத் தொடர்ந்து, லோக்சபாவிலும் இந்தப் பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் முயன்றன. பேசுவதற்கு வாய்ப்பு தராததால், அங்கிருந்தும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.


பா.ஜ., எதிர்ப்புமத்திய வர்த்தக துறை அமைச்சரும், ராஜ்ய சபா அவை முன்னவருமான, பா.ஜ.,வைச் சேர்ந்த பியுஷ் கோயல் கூறியதாவது:சபையின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாலேயே இந்த 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சபையில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியது, மேஜை மீது ஏறியது, காகிதங்களை கிழித்து சபைத் தலைவர் இருக்கை நோக்கி வீசியது போன்ற செயல்களில் ஈடுபட்டால், நட
வடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா?மக்களுக்காக குரல் கொடுத்துள்ளதால் மன்னிப்பு கேட்க முடியாது என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார். பெண் காவலர்களை தாக்கியது போன்றவற்றில் ஈடுபட்ட தன் கட்சி எம்.பி.,க்களின் நடவடிக்கைகளை அவர் ஆதரிக்கிறாரா. இந்த 12 பேரும் தங்களுடைய நடவடிக்கைக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
01-டிச-202117:49:34 IST Report Abuse
DVRR அம்மாடி ரத்தில்லையா?? அவங்க அன்றாடக்காய்ச்சிகள் அவர்கள் சோற்றுக்கு வேறு வழியில்லாமல் பிச்சை எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் இப்படி ஒரேயடியாக கொடூரமாக நடக்கக்கூடாது இப்படிக்கு பப்பு the great
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
01-டிச-202117:31:24 IST Report Abuse
J.Isaac Rajarajan/ kerala என்று ஒருத்தன் என் பெயர் இல்லாமல் கருத்து போடுகிறான்.
Rate this:
Cancel
01-டிச-202116:54:38 IST Report Abuse
அப்புசாமி ஆகஸ்டுலே செஞ்சதுக்கு இப்போ சஸ்பென்ஷனாம். அவைத்தலைவருக்கு இப்போதான் துக்கம் நெஞ்சை அடைக்கிறதாம். மூணு மாசம் சம்பளத்தை கட் பண்ணி கோர்ட்டுக்கு போயிருந்தா, யார் கரீட்டுனு தெரிஞ்சிருக்குமே... இப்போ தான் முழிப்பு வந்துச்சு போலிருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X