பொது செய்தி

இந்தியா

5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு தயாராகிறது தொலைத்தொடர்புத் துறை!

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புது டில்லி: 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான விலை நிர்ணயம், குவாண்டம் தொழில் நுட்பம் மற்றும் அது தொடர்புடைய நிபந்தனைகள் பற்றி விவாதிக்க விரிவான கருத்துக் கேட்பு அறிக்கையை டிராய் வெளியிட்டுள்ளது. டிராயிடம் மேலும் ஏலம் தொடர்பான விவரங்களை மத்திய தொலைத்தொடர்புத் துறை கேட்டுள்ளது.இந்தியாவில் தற்போது 4ஜி அலைபேசி நெட்வொர்க் பயன்பாட்டில் உள்ளது. 4ஜி சேவையால் இணைய வேகம்

புது டில்லி: 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான விலை நிர்ணயம், குவாண்டம் தொழில் நுட்பம் மற்றும் அது தொடர்புடைய நிபந்தனைகள் பற்றி விவாதிக்க விரிவான கருத்துக் கேட்பு அறிக்கையை டிராய் வெளியிட்டுள்ளது. டிராயிடம் மேலும் ஏலம் தொடர்பான விவரங்களை மத்திய தொலைத்தொடர்புத் துறை கேட்டுள்ளது.



latest tamil news




இந்தியாவில் தற்போது 4ஜி அலைபேசி நெட்வொர்க் பயன்பாட்டில் உள்ளது. 4ஜி சேவையால் இணைய வேகம் சிறு நகரங்களிலும் பண்மடங்கு பெருகியுள்ளது. இதன் மூலம் கல்வி, மருத்துவம், விவசாயம், ஸ்மார்ட் நகரங்கள் என புதிய புதிய தொழில் வாய்ப்புகள் சாத்தியமாகியுள்ளன. அந்த வரிசையில் நாடு 5ஜி சேவையை தொடங்க தயாராகி வருகிறது.

இதன் மூலம் குறைந்த நேரத்தில், இடையூறு இல்லாமல் ஜிகாபைட் கணக்கில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும். ஏர்டெல் உள்ளிட்ட அலைபேசி சேவை நிறுவனங்கள் 5ஜி பரிசோதனையை தொடங்கியுள்ளன.


latest tamil news



தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் 5ஜி ஏலத்திற்கு தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இன்று (நவ., 30) ஏலம் விடுவதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதிக்க கருத்துக் கேட்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. டிச., 28-க்குள் சம்பந்தப்பட்டவர்கள் கருத்துகளை வழங்கலாம்.
குறைந்தப்பட்ச ஏல விலை, அலைவரிசைத் திட்டம், ஏலம் விடப்படும் ஸ்பெக்ட்ரம் அளவு போன்றவற்றில் பரிந்துரைகளை வழங்குமாறு டிராயிடம் தொலைத்தொடர்புத் துறையும் கேட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
30-நவ-202122:57:43 IST Report Abuse
Anbuselvan நேர்மையாக நடத்தி 2G ஏமாற்றுக்காரர்கள் தலை குனியுமாறு செய்ய வேண்டும்
Rate this:
உளறுவாயன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-202123:12:41 IST Report Abuse
உளறுவாயன்ஆமாம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X