அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்

Updated : டிச 01, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை :முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.,வின் சிறுபான்மை நலப்பிரிவு செயலருமான அன்வர்ராஜா நேற்று இரவு திடீரென கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அ.தி.மு.க.,வின் மாவட்ட செயலர்கள் கூட்டம், கடந்த 24ல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமியை ஒருமையில் பேசியது தொடர்பாக, முன்னாள்
ADMK, Anwhar Raajhaa, Anwar Raja

சென்னை :முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.,வின் சிறுபான்மை நலப்பிரிவு செயலருமான அன்வர்ராஜா நேற்று இரவு திடீரென கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அ.தி.மு.க.,வின் மாவட்ட செயலர்கள் கூட்டம், கடந்த 24ல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமியை ஒருமையில் பேசியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவிற்கு அக்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.


latest tamil news




முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவரை அடிக்க பாய்ந்தார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் கூட்டத்தில் நடந்தவற்றை ஊடகங்களுக்கு பகிரங்கமாக அன்வர் ராஜா பேட்டி அளித்தார்.அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கட்சியில் இருந்து நேற்று இரவு திடீரென நீக்கப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X