அவிநாசி: அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் ரோடு மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், சரியான திட்டமிடல் இருந்தால், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியும்.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முதல், கால்நடை மருத்துவமனை வரை, சாலை மேம்படுத்தும் பணி நடந்தது. சாலையின் இரு புறமும் இரண்டு அடிக்கு பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், சாலையோரம் உள்ள கடைக்காரர்கள், கடைகளுக்கு வந்து செல்லும் பொதுமக்கள், தங்கள் டூவீலர், கார்களை நடைபாதையின் மீதே நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பாதசாரிகள், சாலையிலேயே நடந்து செல்ல வேண்டியுள்ளது.சாலையோரம் உள்ள கடைகளுக்கும், நடைபாதைக்கும் இடையே, 10 அடிக்கும் அதிகமான இடம் உள்ளது. மண் திட்டுகளாக உள்ள இந்த இடத்தை சமமப்படுத்தி, அங்கு டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்தால், நடைபாதையில் மக்கள் நடந்து செல்ல எதுவாக இருக்கும்; நெரிசலும் தவிர்க்கப்படும்.வாகன பார்க்கிங் முறைப்படுத்தப்பட்டால் மட்டுமே, மேம்படுத்தப்பட்ட இந்த சாலையில் வாகனங்கள் தடையின்றி செல்லவும், நெரிசல் ஏற்படுவகை தவிர்க்கவும் முடியும். எனவே, மாவட்ட கலெக்டர், மாதந்தோறும் நடக்கும் சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் இதுகுறித்து, விவாதித்து நடவடிக்கை எடுப்பதே சிறந்தது.---சாலையோரம் வாகன 'பார்க்கிங்' ஏற்பாடுகளை, போக்குவரத்து போலீசார் தான் செய்ய வேண்டும்- நெடுஞ்சாலைத்துறையினர்கடைகளுக்கு முன் உள்ள இடத்தை சமப்படுத்துவது, நடைபாதையில் வாகனங்கள் நிற்காதவாறு தடுப்பு உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் செலவினத்தை யார் ஏற்பது என்பதில் குழப்பம் உள்ளது.- காவல் துறையினர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE