பொது செய்தி

தமிழ்நாடு

எச்.ஐ.வி., பாதிப்பில் பலிகடாவாகும் பெண்கள்: தொற்று குறைக்க விழிப்புணர்வு 'விறுவிறு'

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டத்தில் ஆண்களுக்கு இணையாக, பெண்களும் எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தற்போது கோவையில், 4 ஆயிரத்து 570க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நோய் தொற்றை தடுக்க, விழிப்புணர்வு பிரசாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. உலகில் மருத்துவர்களுக்கு சவால் விடும் நோய்களில், எய்ட்ஸ் நோயும் ஒன்று. நோய் கிருமிகளை அழிக்க
 எச்.ஐ.வி., பாதிப்பில் பலிகடாவாகும் பெண்கள்: தொற்று குறைக்க விழிப்புணர்வு 'விறுவிறு'

கோவை: கோவை மாவட்டத்தில் ஆண்களுக்கு இணையாக, பெண்களும் எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கோவையில், 4 ஆயிரத்து 570க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நோய் தொற்றை தடுக்க, விழிப்புணர்வு பிரசாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. உலகில் மருத்துவர்களுக்கு சவால் விடும் நோய்களில், எய்ட்ஸ் நோயும் ஒன்று. நோய் கிருமிகளை அழிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் எச்.ஐ.வி., பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

கோவையில், 2 ஆயிரத்து 340 ஆண்களுக்கும், 2 ஆயிரத்து 220 பெண்களுக்கும், எச்.ஐ.வி., இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில், கூட்டு மருத்துவ சிகிச்சை (ஏ.ஆர்.டி.,) முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், தேவையான மருந்து பொருட்கள், 'கவுன்சிலிங்' இலவசமாக வழங்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை ஒரு லட்சத்து, 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு, எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் என, இருவரையும் சேர்த்து, 78 ஆயிரத்து, 650 மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில், 156 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கர்ப்பிணிகள் 37 ஆயிரத்து 850க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில், 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயால் இறந்தவர்களின் விவரம் கண்டறியப்படவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நோய் பாதிப்பு குறைந்துள்ளதாக,கோவை எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ''இந்தியா முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு கர்ப்பிணி தாய்மார்களிடம் எச்.ஐ.வி., சர்வே எடுக்கப்படுகிறது.அந்த புள்ளி விபரங்களின் அடிப்படையிலேயே, பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதை அறிய முடிகிறது.கோவை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 30 மையங்களில் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக கர்ப்பிணிகள், வடமாநிலத்தினருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.கோவை மாவட்டத்தில் உள்ள, அனைத்து பள்ளி கல்லூரி மாணவ,- மாணவிகளிடம் 'ரெட் ரிப்பன் கிளப்' வாயிலாகவும், வினாடி- வினா போட்டி வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ''தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் வாயிலாக இலவச ஆணுறை, 'கவுன்சிலிங்' வழங்கப்படுகிறது,'' என்றார்..

இன்று உலக எய்ட்ஸ் தினம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X