ஜனவரியில் கள் விற்கும் போராட்டம்| Dinamalar

ஜனவரியில் கள் விற்கும் போராட்டம்

Added : டிச 01, 2021 | கருத்துகள் (1) | |
கோவை: கோவையில், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும் வரும் ஜன., 21ல், கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும். தி.மு.க., - அ.தி.மு.க., காங்., கம்யூ., கட்சிகள், கள் இறக்கி விற்பனை செய்வதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பதாக தெரிவித்துள்ளார். நாம் தமிழர்

கோவை: கோவையில், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும் வரும் ஜன., 21ல், கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும். தி.மு.க., - அ.தி.மு.க., காங்., கம்யூ., கட்சிகள், கள் இறக்கி விற்பனை செய்வதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பதாக தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஹிந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோரும் வெவ்வேறு பகுதிகளில் கள் இறக்கும் போராட்டத்தில் பங்கேற்பர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.அர்ஜுன் சம்பத் கூறுகையில், ''தனியார் காய்ச்சும் சாராயத்தை விற்பது அரசின் வேலையல்ல. சாராய ஆலைகள் வழங்கும் பணம், சில கட்சிகளுக்குத் தேவையாக இருக்கிறது. கள் இறக்கும் போராட்டத்துக்கு முழு ஆதரவளிக்கிறோம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X