அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீடு திரும்பினாரா கமல்? கட்சி நிர்வாகி விளக்கம்!

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை, :கொரோனா தொற்று பாதிப்பால், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் கமல், வீடு திரும்பியதாக பரவிய தகவலை மக்கள் நீதி மய்யத்தினர் மறுத்துள்ளனர்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 22ம் தேதி சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் உள்ள கமல், மெல்ல மெல்ல
வீடு திரும்பினாரா கமல்? கட்சி நிர்வாகி விளக்கம்!

சென்னை, :கொரோனா தொற்று பாதிப்பால், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் கமல், வீடு திரும்பியதாக பரவிய தகவலை மக்கள் நீதி மய்யத்தினர் மறுத்துள்ளனர்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 22ம் தேதி சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் உள்ள கமல், மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.
இந்நிலையில், நேற்று கமல் வீடு திரும்பியதாக தகவல் வெளியானது.

இதை மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் மறுத்துள்ளார்.முரளி அப்பாஸ் கூறுகையில், ''கமல் இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டுக்கு திரும்பியதாக சமூக வலைதளங்களில் படம் உலா வருகிறது. அந்த படம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில், காலில் அறுவை சிகிச்சை முடிந்து, கமல் வீடு திரும்பியபோது எடுத்த படம். கமல் நலமுடன் உள்ளார்.


latest tamil news



விரைவில் வீடு திரும்புவார்,'' என்றார்.இதற்கிடையே, கமல் நடித்து வந்த, விக்ரம் படத்தின் வேலைகளையும் படக்குழுவினர் மாற்றியுள்ளனர். படக்குழுவினர் அனைவரும் பரிசோதிக்கப்பட்டு, படப்பிடிப்பை சென்னையிலேயே 'செட்' அமைத்து எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
22-ஜன-202210:08:45 IST Report Abuse
jayvee இதுபோன்ற குப்பை செய்திகளை தவிருங்கள் ..
Rate this:
Cancel
sunil kumar - chennai,இந்தியா
01-டிச-202111:11:21 IST Report Abuse
sunil kumar போயி வேலைய பாருங்க
Rate this:
Cancel
R Kumar - Triolet,மொரிஷியஸ்
01-டிச-202111:00:34 IST Report Abuse
R Kumar சேர்த்த பெரும் புகழும் வைத்து வயதான காலத்தில் நிம்மதியாக வாழாமல் (ரஜினி மாதிரி ) அரசியல் வியாதியால் அவதிப்படும் இவர் என்று திருந்துவாரோ ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X