இந்தியா

ஆறுமுகசாமி ஆணைய வழக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தது கோர்ட்

Added : டிச 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நேற்று ஒத்திவைத்தது.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2016ல் அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016, டிச., மாதம்
ஆறுமுகசாமி ஆணைய வழக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தது கோர்ட்

புதுடில்லி : ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நேற்று ஒத்திவைத்தது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2016ல் அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016, டிச., மாதம் உயிரிழந்தார்.latest tamil newsஇவரது மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணை ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதையடுத்து விசாரணை ஆணையத்துக்கு இடைக்கால தடை விதித்து 2019ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழகத்தில் தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பின், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மீதான தடையை விலக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பத்த உத்தரவு:ஜெயலலிதா மரண வழக்கு தொடர்பாக அறுமுகசாமி ஆணையத்திடம் உள்ள ஆவணங்களை பெறவும், சாட்சிகளை குறுக்கு விசாரணை
செய்யவும் அப்பல்லோ நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கப்படும். விசாரணை கமிஷனுக்கு உதவிட மருத்துவ குழுவை அமைக்க எய்ம்ஸ் இயக்குனருக்கு உத்தரவிடப்படும். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


712 சதுரடி அறை ஒதுக்கீடுநீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள கலச மஹாலில் 200 சதுர அடியில் அறை ஒதுக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதுமட்டுமின்றி, 300 சதுர அடியில் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வந்தன. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் 200 சதுர அடி அறையில் இயங்குவதற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிருப்தி தெரிவித்தது. விசாரணை நடத்த போதுமான அறையை ஒதுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, தற்போது கூடுதலாக 712 சதுர அடி அறை ஒதுக்கப்பட்டுள்து. இந்த அறையில் விசாரணை மட்டுமே நடக்கவுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள அறை, பதிவாளர் அலுவலக பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கு விசாரணை நடத்துவதற்கு தேவையான, நீதிமன்ற வடிவிலான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
18-ஜன-202200:20:17 IST Report Abuse
DARMHAR ஆறுமுக சாமி அவர்கள் காலத்திற்கு பிறகும் இந்த விசாரணையை வேறொருவர் மேற்கொண்டு தொடர்ந்து நடத்த நியமிக்கப்பட்டாலும் அதில் ஒன்றும் வியப்பில்லை.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
01-டிச-202108:32:37 IST Report Abuse
GMM ஜெயலலிதா உடல் நல குறைவினால் அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். உறவினர்கள், அரசு மருத்துவர்கள் தகவல் இன்றி உடல் நலக்குறைவு என்று எப்படி முடிவு செய்ய பட்டது? உயிர் தோழி சட்ட பூர்வ வாரிசா? அப்போலோ மருத்துவரை விசாரிப்பது போல், திமுக கட்சிக்காரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அரசு கட்சி மருத்துவமனையை விசாரிக்குமா? முதல்வர் என்பதால் அரசு மருத்துவர் பரிசோதிக்க ஏன் அனுமதிக்க வில்லை? தலையும் புரியாமல், காலும் புரியாமல் விசாரணை எதற்கு பயன்படும்? ஆறுமுக சாமி ஆணையம் அரசியல் ஆணையம்?
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
01-டிச-202108:23:19 IST Report Abuse
Rpalnivelu பன்னீரை திருப்தி படுத்த பழனியில் போடப் பட்ட வேஸ்ட் பேப்பர் கமிசன் இவர் விசாரிக்கிறார் விசாரிக்கிறார் விசாரித்துக் கொண்டே.. இருக்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X