அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று அ.தி.மு.க., செயற்குழு கூட்டம்

Added : டிச 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை :அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம், கடந்த மாதம் 24ம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் உட்கட்சி
இன்று அ.தி.மு.க., செயற்குழு கூட்டம்


சென்னை :அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம், கடந்த மாதம் 24ம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.அப்போது, கட்சியினர் இடையே கடும் விவாதம் நடந்தது. பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையிலும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது, கட்சி நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


latest tamil news




அன்றைய தினமே, கட்சி செயற்குழு கூட்டம், இன்று காலை 10:00 மணிக்கு, கட்சி அலுவலகத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், உட்கட்சி தேர்தல், பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது மற்றும் அவை தலைவர் தேர்வு குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.மேலும், தி.மு.க., அரசுக்கு எதிராக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், வாக்குவாதம் ஏற்பட்டது போல, செயற்குழுவிலும் பிரச்னை வெடிக்குமா; அமைதியாக முடியுமா என்பதே, கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


டிச., 5ல் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி



அ.தி.மு.க., தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக மக்களுக்காக தன் அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்து பாடுபட்ட ஜெயலலிதாவுக்கு, புகழ் அஞ்சலி செலுத்துவது, கட்சியினரின் இன்றியமையாத கடமை.அவரது ஐந்தாம் ஆண்டு நினைவு நாளான, டிச., 5 காலை 10:00 மணிக்கு, மெரினா கடற்கரையில் உள்ள, அவரது நினைவிடத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில், கட்சி நிர்வாகிகள், மலர் துாவி மரியாதை செலுத்த உள்ளனர். அங்கு உறுதிமொழி எடுக்கவும் உள்ளனர்; இதில், கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும்.
மேலும், அனைத்து பகுதிகளிலும், ஜெயலலிதா படத்தை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலர்கள் செய்திட வேண்டும்.கட்சி செயல்படும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, கேரளா, புதுடில்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், கட்சியினர் ஜெயலலிதா படங்களை வைத்து, மலர் அஞ்சலி செலுத்தவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா
01-டிச-202107:30:25 IST Report Abuse
K.SANTHANAM செயற்குழு கூட்டம் அமைதியாக நடைபெற வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X