அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தி.மு.க.,வில் வாரிசு அரசியலுக்கு இடமில்லையாம்.. சேகர்பாபுவின் காமெடி!

Added : டிச 01, 2021 | கருத்துகள் (85)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:சி.சிவகுமார், கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க.,வில் உழைப்பவரே உயர்ந்தவர்; வாரிசு அரசியலுக்கு இடமில்லை' என்று ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசியிருக்கிறார். சேகர்பாபு, அமைச்சர் பதவி பெறும் அளவிற்கு, எத்தனை ஆண்டுகள் தி.மு.க.,விற்காக உழைத்தார்
DMK, Sekar Babu, PK Sekar Babu, Minister


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


சி.சிவகுமார், கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க.,வில் உழைப்பவரே உயர்ந்தவர்; வாரிசு அரசியலுக்கு இடமில்லை' என்று ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசியிருக்கிறார். சேகர்பாபு, அமைச்சர் பதவி பெறும் அளவிற்கு, எத்தனை ஆண்டுகள் தி.மு.க.,விற்காக உழைத்தார் என்பதையும், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி எப்போது தி.மு.க.,வில் சேர்ந்தார் என்பதையும், அவரே நினைத்துப் பார்த்துபேசட்டும்.

சேகர்பாபுவை விட, அவரது தொகுதியில் தி.மு.க.,வில், 'சீனியர்' யாரும் இல்லையா... கட்சிக்காக அதிகம் உழைத்தவர் யாருமே இல்லையா? 'வாரிசு அரசியல்' என்றாலே தி.மு.க., தான். அது பற்றி பேச, தி.மு.க.,வினருக்கு கொஞ்சம் கூட தகுதி கிடையாது. கருணாநிதியின் வாரிசுகள் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி இவர்கள் எல்லாம் கட்சியில் உழைப்பால் உயர்ந்தோரா?


latest tamil news


அப்படியே தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்கள் பக்கம் வருவோம்... துரைமுருகன் மகன் -கதிர் ஆனந்த், நடராஜன் மகன் - சோமு, வீரபாண்டி ஆறுமுகம் மகன் -ராஜா, பாலு மகன் ராஜா, பெரியசாமி மகன் -செந்தில்குமார், பொன்முடி மகன்- தெய்வசிகாமணி... இன்னும் இருக்கிறது...

ஆலடி அருணா -பூங்கோதை, தங்கபாண்டியன் -தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன், அன்பில் தர்மலிங்கம் -பொய்யாமொழி, அவரது மகன் மகேஷ், கிருஷ்ணமூர்த்தி மகன்-பன்னீர்செல்வம்... பெரியசாமி மகன் ராஜா, துாத்துக்குடி பெரியசாமி -கீதா ஜீவன், புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு...முடியலை... இன்னும் நீளும்!

இவர்கள் எல்லாம் யார் என்பதை சேகர்பாபு விளக்குவாரா? இது தவிர மாவட்டம், ஒன்றியம், நகரப்பகுதிகளில் தி.மு.க.,வில் பதவியில் இருப்போரின் வாரிசுகள் தான் பொறுப்புகளின் உள்ளனர். எனவே அமைச்சர் சேகர்பாபு, இனி இப்படி எல்லாம் காமெடியாக பேசக் கூடாது!

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
01-டிச-202122:39:25 IST Report Abuse
Vijay D Ratnam குடுக்குறதுக்கு மேல கூவுறாண்டா ங்கொய்யால
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
01-டிச-202121:49:34 IST Report Abuse
Duruvesan கேடு கெட்ட கட்டுமரம் வாரிசு அரசியல் செய்ய தீயமுக சங்கர மடம் இல்லைனு சொன்ன போது துரை ஜாலரா அடிச்சாரு, இப்போ இவரு அடிக்கிறாரு, ஹிந்து அடிமைங்க ஓட்டு போடும்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
01-டிச-202121:18:31 IST Report Abuse
S. Narayanan மக்களை ஏமாற்றி இவர்கள் செய்வது எல்லாம் அயோக்கிய தனம். இவர்கள் எப்போது உண்மை சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் சொல்வதெல்லாம் பொய் செய்வதெல்லாம் துரோகம். தமிழ் மக்களுக்கு விடியல் கிடைக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X