மகளுக்கு பாலியல் தொல்லை தந்த தந்தை கைது: இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்:ரூ.2.27 கோடி சிக்கிய விவகாரம்: பெண் அதிகாரி கைதுஓசூர்: வேலுார் கோட்ட பொதுப்பணித் துறையில், தொழில்நுட்ப கல்வி பிரிவு செயலராக பணியாற்றிய பெண் அதிகாரி ஷோபனாவிடம், 2.27 கோடி ரூபாய் லஞ்ச பணம் சிக்கிய நிலையில், நேற்று அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.9 வயது சிறுவனை கொலை செய்த 13 வயது சிறுவன் கைதுசிவகாசி:
crime, murder, arrest


தமிழக நிகழ்வுகள்:ரூ.2.27 கோடி சிக்கிய விவகாரம்: பெண் அதிகாரி கைது


ஓசூர்: வேலுார் கோட்ட பொதுப்பணித் துறையில், தொழில்நுட்ப கல்வி பிரிவு செயலராக பணியாற்றிய பெண் அதிகாரி ஷோபனாவிடம், 2.27 கோடி ரூபாய் லஞ்ச பணம் சிக்கிய நிலையில், நேற்று அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.


9 வயது சிறுவனை கொலை செய்த 13 வயது சிறுவன் கைது


சிவகாசி: சித்துராஜபுரம் 1வது தெருவை சேர்ந்த சேசு மகன் மைக்கேல் அஜய் 9. நவ.26 ல் காணாமல் போன நிலையில்,இரு நாட்களுக்கு பின் அப்பகுதி குளத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்டான்.

குளிக்க சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வந்த நிலையில், அப்பகுதி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவினை ஆய்வு செய்ததில், மைக்கேல் அஜய் 13 வயது சிறுவனுடன் சென்றது தெரிய வந்தது. அச்சிறுவனை போலீசார் விசாரித்ததில் மைக்கேல் அஜயை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்ததாக தெரிவித்தான். மைக்கேல் அஜய் தந்தை சேசு, கொலை செய்த 13 வயது சிறுவனை அடித்துள்ளார். இதை மனதில் கொண்டு மைக்கேல் அஜய்யை குளத்திற்கு அழைத்து சென்று மூழ்கடித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 13 வயது சிறுவன் சிவகாசி பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார்.


மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது


ஆனைமலை: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, 16 வயது சிறுமி பிளஸ் 1 படித்து வருகிறார். சிறுமியின் 37 வயது தந்தை, 2015 முதல் 2018 வரை பாலியல் தொல்லை கொடுத்ததாக, 'சைல்டு லைன்' எண்ணுக்கு சிறுமி புகார் தெரிவித்தார். 'சைல்டு லைன்' அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுமியிடமும், தந்தையிடமும் போலீசார் விசாரித்தனர். இதில் புகார் உண்மை என தெரியவர, தந்தையை 'போக்சோ' சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.


காமுகனுக்கு 20 ஆண்டு சிறை


கடலுார்: கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலத்தைச் சேர்ந்தவர் தனசேகர், 29; கூலித் தொழிலாளி. இவர் 2019 ஜனவரி 20ல் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் தனசேகரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். தனசேகருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.


பஸ் படிக்கட்டில் பயணம்; 13 மாணவர்கள் படுகாயம்


வேலுார்:வேலுார் அருகே, பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற 13 மாணவர்கள், தடுப்புகளில் மோதி படுகாயம் அடைந்தனர்.

வேலுாரில் இருந்து ஆற்காட்டிற்கு நேற்று காலை 9:00 மணிக்கு, ஏ.ஏ.ஏ., என்ற தனியார் பஸ் சென்றது. பஸ்சில் அதிகளவு பயணியர் இருந்ததால், மேல்விஷாரம் செல்ல வேண்டிய மாணவர்கள், படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றனர்.வேலுார் அருகே பெருமுகையில், பைக் ஒன்றை முந்திச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையை ஒட்டியுள்ள இரும்பு தடுப்புகள் மீது மோதி, 50 மீட்டர் உராய்ந்தபடி சென்றது. இதில் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற 13 மாணவர்கள், சாலையில் துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.


உதவி கலெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை


திருச்சி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மன்னார்குடி வருவாய் நீதிமன்ற உதவி கலெக்டர் பவானி(54) வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில், கோடிக்கணக்கான ரூபாய் சொத்து சேர்த்துள்ளதற்கான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இன்ஜினியருக்கு 7 ஆண்டு சிறை


ஊட்டி:லஞ்ச வழக்கில் உதவி செயற்பொறியாளருக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆறுசாமி, 57. சேரம்பாடியில், புதிதாக நுாலகம் கட்டுமான பணி 2008ம் ஆண்டு நடந்தது. அதற்கான பணம் விடுவிக்க ஒப்பந்ததாரரிடம் ஆறுசாமி, 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஒப்பந்ததாரர் சந்திரபோஸ், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். 2008 செப்., 18ல் ஆறுசாமி லஞ்சம் பெற்ற போது, கைது செய்யப்பட்டார்.வழக்கு, ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. ஆறுசாமிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார்.


இந்திய நிகழ்வுகள்:ரூ.40 ஆயிரம் லஞ்சம்: நீதிபதி 'டிஸ்மிஸ்'


மண்டி: ஹிமாச்சல பிரதேசத்தில் மண்டி மாவட்டம், சுந்தர்நகர் நீதிமன்றத்தில் கூடுதலை தலைமை மாஜிஸ்திரேட்டாக பணியாற்றியவர் கவுரவ் சர்மா, 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி, கையும் களவுமாக பிடிபட்டதால், பணியிலிருந்து 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.


மருத்துவர் உடை அணிந்து வந்த மர்மநபர்கள் நகைகள் கொள்ளை


பெங்களூரு: உருமாறிய 'ஒமைக்ரான்' கொரோனா பரவுவதால், புதிய தடுப்பூசி செலுத்த வந்துள்ளதாக கூறி, மருத்துவர் உடை அணிந்த வந்த மூவர், துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, 50 கிராம் தங்க நகைகள் கொள்ளை அடித்து தப்பியோடிய சம்பவம் யஷ்வந்த் பூரில் நடந்தது.


latest tamil newsகள்ளச்சாராயம்: 2 பேர் பலி


திருச்சூர்: கேரளாவின் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா கிராமத்தை சேர்ந்தவர்கள் பிஜு மற்றும் நிஷாந்த். நண்பர்களான இருவரும், சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்தனர். வாயில் நுரையுடன் மயங்கி விழுந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிஜு நேற்று முன்தினம் இரவும், நிஷாந்த் நேற்றும் பலியாயினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


நடிகையை மிரட்டியவர் கைது


கோல்கட்டா: பெங்காலி திரைப்படம் மற்றும் 'டிவி' தொடர் நடிகை அருனிமா கோஷ், மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் வசிக்கிறார். இவரது வீட்டிற்கு சமீபத்தில் சென்று கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் கைது செய்தனர். 'கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகைக்கு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ள அவர், ஏற்கனவே இரு முறை கைதாகி உள்ளார்' என, போலீசார் தெரிவித்தனர்.


பன்றியை விரட்டியவர் சுட்டுக்கொலை


வயநாடு: கேரளாவின் வயநாடு மாவட்டம் கம்பளக்காடு அருகே, வயலில் பயிர்களை நாசமாக்கும் காட்டுப்பன்றிகளை விரட்ட ஜெயன், 36, உறவினர் ஷருண் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சென்றனர். இவர்களில் ஜெயன் துப்பாக்கி குண்டு பாய்ந்து வயலில் இறந்து கிடந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஷருண் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். வேட்டைக்கு வந்த சிலர் அவர்களை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது; போலீசார் விசாரிக்கின்றனர்.


உலக நிகழ்வுகள்:தமிழ் பத்திரிகையாளர் மீது இலங்கை வீரர்கள் தாக்குதல்


கொழும்பு: நம் அண்டை நாடான இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடந்த கடைசிகட்ட போர் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தமிழ் பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக இலங்கை ராணுவ வீரர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 2009ல், ராணுவத்துக்கும், புலிகளுக்கும் நடந்த கடைசி கட்ட போரின் நினைவையொட்டி, இலங்கையைச் சேர்ந்த தமிழ் பத்திரிகையாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன், முல்லைத் தீவு மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில், சமீபத்தில் செய்தி சேகரிக்க சென்றார். அங்கு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊடக ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடூர தாக்குதலுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று ராணுவ வீரர்களை கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இராக் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி


இராக்கின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில், குர்துப் படையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மற்றொரு தாக்குதலில் 4 குர்துப் படையினர் காயமடைந்தனர்.


ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; 14 பேர் பலி


பாகு : அசர்பைஜான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 14 பேர் பரிதாபமாக பலியாயினர்.

கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்காசிய எல்லையில் அமைந்துள்ள நாடு, அசர்பைஜான். இங்கு ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர், நேற்று கரேபத் ராணுவ மையத்திற்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 14 பேர் உடல் நசுங்கி, பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த ராணுவ மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
18-ஜன-202200:37:00 IST Report Abuse
DARMHAR இப்படித்தான் கடலூர் திருப்பாப்புலியூரில் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு ஒய்வு பெற்றராணுவ அதிகாரி தனது மூத்த மகளிடம் பாலியல் உறவு கொண்டதை அறிந்த அந்த பெண்ணின் கணவன் தூக்கிலிட்டுக்கொண்டதும் நினைவுக்கு வருகிறது.இப்படிப்பட்ட மனிதர்கள் மிருகங்களைவிட கேவல மானவர்கள்
Rate this:
Cancel
deep - Chennai,இந்தியா
02-டிச-202107:07:42 IST Report Abuse
deep எல்லாருக்கும் பேர் இருக்கு. மகளைப் பாலியல் தொல்லை செஞ்ச தந்தைக்கு மட்டும் பேர் இல்லையா? ஒருவேளை தனியார் அமைப்புச் சேர்ந்த மர்மநபரா இருக்குமோ?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02-டிச-202100:56:13 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த போக்சோ சட்டம் மட்டும் முன்பே இருந்திருந்தால் அதில் கைதாகும் முதல் ... ஈ.வே.ராமசாமி நாயுடுதான் இருந்திருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X