பொது செய்தி

இந்தியா

'ஹாம்' வானொலி பயனாளர்களால் குடும்பத்துடன் இணைந்த மூதாட்டி

Added : டிச 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோல்கட்டா : 'ஹாம்' வானொலி பயனாளர்களின் உதவியால், 37 ஆண்டுக்கு பின், குடும்பத்தினருடன் இணைந்தார் மூதாட்டி.மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பராகனஸ் மாவட்டம், பக்காலி கடற்கரை பகுதியில் உள்ள டீக்கடையில், 67 வயதான மூதாட்டி ஒருவர் வேலை செய்துவந்தார். பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதிக்கு வந்த அவருக்கு, குடும்பத்தினர், சொந்த ஊர் உட்பட எந்த விபரமும் தெரியாது. இவரைப் பற்றி அப்பகுதியை
West Bengal, HAM radio, reunion

கோல்கட்டா : 'ஹாம்' வானொலி பயனாளர்களின் உதவியால், 37 ஆண்டுக்கு பின், குடும்பத்தினருடன் இணைந்தார் மூதாட்டி.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பராகனஸ் மாவட்டம், பக்காலி கடற்கரை பகுதியில் உள்ள டீக்கடையில், 67 வயதான மூதாட்டி ஒருவர் வேலை செய்துவந்தார். பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதிக்கு வந்த அவருக்கு, குடும்பத்தினர், சொந்த ஊர் உட்பட எந்த விபரமும் தெரியாது. இவரைப் பற்றி அப்பகுதியை சேர்ந்த ஹாம் வானொலி பயனாளர்கள் தங்களுக்குள் தகவல் பகிர்ந்து கொண்டனர்.

இதன்பின் அந்த மூதாட்டியுடன் ஹாம் வானொலி பயனாளர்கள் பேசிய போது, தன் சொந்த கிராமத்தின் பெயர் சோராபஸ்தி என தெரிவித்தார். ஆனால் அது எங்கிருக்கிறது என்ற எந்த விபரம், அவருக்கு தெரியவில்லை. கிராமத்தின் பெயரை வைத்து அது எங்கிருக்கிறது என ஹாம் வானொலி பயனாளர்கள் தேடிய போது, அது ஜார்க்கண்ட் மாநிலம் பொகோரா மாவட்டத்தில் இருப்பது தெரிந்தது.


latest tamil news



அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்த போது, அந்த மூதாட்டியின் கணவன் மற்றும் குடும்பத்தினரை கண்டுபிடித்தனர். பின்னர், மூதாட்டியை ஜார்க்கண்ட் அழைத்து சென்று, கணவரிடம் ஒப்படைத்தனர். 37 ஆண்டுக்கு முன் தன் மனைவி காணாமல் போனதாக கணவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
01-டிச-202112:31:12 IST Report Abuse
Loganathan Kuttuva Radio club helped the nation during tsunami time.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X