பொது செய்தி

இந்தியா

இடஒதுக்கீட்டுக்கான அளவுகோல் நிர்ணயிக்க குழு அமைத்தது அரசு

Added : டிச 01, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
புதுடில்லி : பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு குழு அமைத்துள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக அளவுகோல்
EMS quota, review panel, formed, EWS criteria, EWS reservation

புதுடில்லி : பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டது.

'எந்த அடிப்படையில் இந்த அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டது' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கேள்வி எழுப்பியது. இதையடுத்து இடஒதுக்கீட்டுக்கான அளவுகோலை மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நீதித்துறை நேற்று அறிவித்தது.


latest tamil news'இந்த குழு பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரைக் கண்டறிவதற்காக நாட்டில் இதுவரை பின்பற்றப்பட்ட பல்வேறு அணுகுமுறைகளையும் ஆய்வு செய்யும். மேலும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரை அடையாளம் காண பின்பற்றப்பட வேண்டிய அளவுகோல்களை பரிந்துரைக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் முன்னாள் நிதித்துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பு செயலர் வி.கே.மல்கோத்ரா, மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சய் சன்யால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.'இந்த கமிட்டி மூன்று வாரங்களில் தங்கள் பரிந்துரையை சமர்ப்பிக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yavarum kelir - yadhum vore ,இந்தியா
01-டிச-202114:58:30 IST Report Abuse
yavarum kelir ஒரு சந்தேகம்... இட ஒதுக்கீடு ல வந்த டீச்சர் கிட்ட படிச்சா மாணவன் 95 மதிப்பெண் எடுக்க முடியுமா ?
Rate this:
raja - Cotonou,பெனின்
01-டிச-202116:04:32 IST Report Abuse
rajaஒருவேளை அப்படி எடுத்தா அந்த மாணவன் இட ஒதுக்கீட்டுல வராத டீச்சருகிட்ட டீயூசன் படிச்சிருக்கான்னு அர்த்தம்........
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
01-டிச-202114:38:13 IST Report Abuse
R.RAMACHANDRAN தாழ்த்தப்பட்டவர்கள் தவிர மற்றவர்களுக்கெல்லாம் இட ஒதுக்கீடு மற்றும் பிற சலுகைகள் ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு போட்டியிட்டு முன்னேற ஏற்பாடு செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை இந்த சமுதாயம் தள்ளியே வைத்துள்ளதால் அந்த தீண்டாமை ஒழியும் வரை அவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் பிற சலுகைகள் தொடர வேண்டும்.
Rate this:
Cancel
01-டிச-202114:30:00 IST Report Abuse
ஆரூர் ரங் EWS ஒதுக்கீடு சட்டத்திலும் எந்த குறிபிட்ட சாதியினர் பெயரும் குறிப்பிடப்பட வில்லை.🤔 அதாவது வேறெந்த ஒதுக்கீட்டு பிரிவிலும் விண்ணப்பிக்காமல் விட்டு விட்டு EWS இல் மட்டும் விண்ணப்பிக்கலாம். சாதி சான்றிதழ் இணைக்கக் கூடாது. எனவே OBC SC ST பிரிவிலும் ஏழைகளாக இருந்தால் EWS இல் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அதன்படி EWS சட்டத்தை திமுக வின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்டு கூட ஆதரித்து வாக்களித்தனர். ஒரு தடை என்னவென்றால் தமிழ்நாட்டில் அதற்கான வருவாய் சான்றிதழ்😇 வாங்குவது மிகக் கடினம். இழப்பு தமிழக ஏழைகளுக்குதான் . ஏழைகள் முன்னேறிவிட்டால் குவாட்டர் பிரியாணி 2000 க்கு யார் ஓட்டுப் போடுவர்?
Rate this:
Suri - Chennai,இந்தியா
01-டிச-202117:42:43 IST Report Abuse
Suriஉண்மைக்கு மரணத்தை மறுபடி மறுபடி கூறினால் உண்மையாகிவிடாது. EWS அரசாணையை ஒழுங்காக படித்து பார்க்கவும். BC/SC/ST பிரிவுகளில் சாராத சமூகங்கள் மற்றும் அத அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வருமான மற்றும் சொத்து ஷரத்துகளுக்கு உட்பட்ட ஆட்கள் மட்டுமே EWS இடஒதிக்கீடுக்கு விண்ணப்பிக்கமுடியும் என்று தெளிவுற கூறப்பட்டுள்ளது. எவ்வளவு தானா புத்திசாலித்தனம்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X