பள்ளி பகுதிகளில் குப்பை, மழைநீர் தேக்கம் ; பரிதவிப்பில் ஸ்ரீவி., மாணவர்கள்

Added : டிச 01, 2021 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பள்ளி பகுதிகளில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு, ரோடு ஆக்கிரமிப்பால் சைக்கிளில் பயணம் செய்வதில் சிரமம், ரோட்டில் தேங்கும் மழைநீரால் டெங்கு அச்சம் என பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர் ஸ்ரீவி., பகுதி பள்ளி மாணவர்கள்.மழை பெய்தால் இங்குள்ள நகராட்சி திரு.வி.க. பள்ளி மைதானத்தில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பள்ளி பகுதிகளில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு, ரோடு ஆக்கிரமிப்பால் சைக்கிளில் பயணம் செய்வதில் சிரமம், ரோட்டில் தேங்கும் மழைநீரால் டெங்கு அச்சம் என பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர் ஸ்ரீவி., பகுதி பள்ளி மாணவர்கள்.

மழை பெய்தால் இங்குள்ள நகராட்சி திரு.வி.க. பள்ளி மைதானத்தில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு துணை போகிறது.பள்ளியின் நுழைவு வாயில் பகுதியில் குப்பை கொட்டப்பட்டு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. ஊரணிபட்டி நகராட்சி பள்ளி தெருவில் பேவர் பிளாக் ரோடுகள் சிதைந்து காணப்படுகிறது. ராமகிருஷ்ணாபுரம் முதல் தெருவில் இருந்து ஒயிட்பீல்டு பள்ளிக்கு வரும் பாதை துாய்மையின்றி காணப்படுகிறது. மகாத்மா வித்யாலயா பள்ளி முன்பு முனியாண்டி கோயில் வளைவிலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மெயின் கேட் பகுதியில் லோடு மினிவேன்கள் நிறுத்தப்பட்டு மாணவிகள் எளிதில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இங்குள்ள கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடுடன் உள்ளன.குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி தெருவில் சைக்கிள்கள், டூவீலர்கள், ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.இவ்வாறு நகரின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் எளிதில் செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு, சுகாதாரக்கேடு, போக்குவரத்து நெருக்கடி உள்ளதால் இதன் மீது நகராட்சி, போலீஸ் நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X