மானாமதுரை : மானாமதுரையில் தரமற்ற பணியால் கட்டும்போதே கால்வாய் இடிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
மானாமதுரை பட்டத்தரசி ராம்நகர் பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகிலுள்ள சுக்கா ஊரணியில் கலந்தது. இந்தக் கழிவுநீர் சுப்பன் கால்வாயில் விடுவதற்கு பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.11.70 லட்சம் செலவில் சிறு பாலம் மற்றும் கால்வாய் கட்டும் பணி சில நாட்களாக நடைபெற்று வந்தது. தரமற்ற கட்டுமான பணியால் கால்வாயின் ஒரு பகுதி கட்டும்போதே இடிந்து விழுந்தது. தரமற்ற பணியால் கால்வாய் கட்டும்போதே இடிந்து விழுந்ததால் பேரூராட்சி நிர்வாகத்தினர் பணியை செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் தரமான முறையில் கால்வாய் மற்றும் சிறு பாலம் கட்டும் பணியை நடத்த வேண்டும் என்றனர்.