கோர்ட் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சருக்கு முன்ஜாமின் கிடைக்குமா?

Added : டிச 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை : அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமின் கோரிய, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனுவின் மீதான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தார். ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை பெற்று தருவதாக, 3 கோடி ரூபாய் பெற்றதாகவும், வேலை
பண மோசடி,ராஜேந்திர பாலாஜி,முன்ஜாமின்,முன்னாள் அமைச்சர்

சென்னை : அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமின் கோரிய, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனுவின் மீதான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தார். ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை பெற்று தருவதாக, 3 கோடி ரூபாய் பெற்றதாகவும், வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாகவும், ராஜேந்திர பாலாஜி உட்பட நால்வருக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.


latest tamil news


புகாரை, விஜய் நல்லதம்பி மற்றும் ரவீந்திரன் என்ற இருவர் அளித்தனர். இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் உள்ளதால், முன்ஜாமின் வழங்க கூடாது என, போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

குற்றச்சாட்டில் தொடர்பில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும், ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.இருதரப்பு வாதங்களுக்கும் பின், முன்ஜாமின் மனுக்களின் உத்தரவை, நீதிபதி நிர்மல்குமார் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-ஜன-202202:27:48 IST Report Abuse
DARMHAR இந்த மூஞ்சியைப்பார்த்தாலே ஒரு பேட்டை ரௌடி போலத்தான் தெரியுது.. நீதி மன்றத்தில் விசாரணை செய்து ஒரு பன்னிரண்டு வருஷங்கள் சிறை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு அதை அனுபவித்து திரும்பி வந்தாலும் இவன் திருந்த மாட்டான். மறுபடியும் பழைய குருடி கதவை திறவடி என்ற கதை தான். குற்றம் புரிந்தவர் வாழ்வினிலே நிம்மதி ஏது என்று யாரோ ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் பாடிய சினிமா பாட்டு ஒன்று தற்போதுநினைவுக்கு வருகிறது.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
01-டிச-202113:28:58 IST Report Abuse
raja சுடுகாட்டு ஊழல் பணினவனும் இப்போ திமுகா போயி புனிதனா மாறிட்டான்னு உடன்பிறப்புக்குல் புளங்காகிதம் அடையிறானுவோ... ஒருவேளை இவங்க செஞ்சது எல்லாம் 1.76லச்சம் கோடிக்கு ஈடாகாதாளையோ....
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
01-டிச-202111:59:50 IST Report Abuse
Samathuvan இனிமே என்னுடைய பேரபிள்ளைகளை இந்த போட்டோவைத்துதான் பயமுறுத்த போறேன். ரொம்ப நன்றி.
Rate this:
raja - Cotonou,பெனின்
01-டிச-202113:33:36 IST Report Abuse
rajaஆம.. நீங்கதான் நெத்தியில பெருசா குங்கும பொட்டு வைச்சிருக்கிற போட்டவெல்லாம் சாத்தானு சொல்றவங்களாச்சி.... உங்க முன்னோர்கள் கூட ரொட்டிக்காக மதம் மாறுவதற்கு முன்னாடி காட்டு முனிபோல பெருசாத்தான் வச்சிருந்துருப்பாங்க.... அவங்க போட்டோவை பேரனுக்கு காட்டி பயமுறுத்தலாமே........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X