பொது செய்தி

தமிழ்நாடு

உத்தரவு பயிர் சேதம் கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர்...நீர் நிலைகளையும் கண்காணிக்க அறிவுறுத்தல்

Added : டிச 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்கள் குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை
 உத்தரவு    பயிர் சேதம் கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர்...நீர் நிலைகளையும் கண்காணிக்க அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்கள் குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., விஜய்பாபு, வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம், கலெக்டர் நேர்முக உதவியாளர்

(விவசாயம்) விஜயராகவன், ஆர்.டி.ஓ.,க்கள் சரவணன், சாய்வர்த்தினி மற்றும் தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வருவாய், பொதுப்பணி, கூட்டுறவு உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரிதிநிதிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், மாவட்டத்தில் உள்ள நீர் நிலை வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் விட்டதால் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். சேதமடைந்த மஞ்சள், மரவள்ளி, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். உடனடியாக கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதனைத் தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், 'மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு துார்வாரப்படும்.

வருவாய்த்துறை தொடர்பான சான்றுகள் அனைத்தும் விவசாயிகளுக்கு விரைவாக கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.விவசாய பயிர்க்கடன் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கிடவும், விவசாயப் பணிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 2,427 மெட்ரிக் டன் யூரியா, 726 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,675 மெட்ரிக் டன் பொட்டாஷ், 833 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5,974 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ளது.மணலுார்பேட்டை முதல் கள்ளக்குறிச்சி வரையிலும், சங்கராபுரம் முதல் ரிஷிவந்தியம் வரையிலும் உள்ள வழித்தடத்தில் பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

தொடர்ந்து, வடகிழக்கு மழையினால் ஏற்பட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களின் பாதிப்பு விபரங்களை கணக்கெடுக்கவும் உரிய நிவாரணம் வழங்கவும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.அத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை கண்காணித்திட பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X