சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி ஊழியர்கள் 16, 17ல் 'ஸ்டிரைக்!'

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : வங்கிகள் தனியார் மயமாக்கத்தை அனுமதிக்கும், வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு, வரும் 16, 17ம் தேதிகளில், 'ஸ்டிரைக்' அறிவித்துள்ளது.அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச்செயலர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது: இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா - 2021,
Bank Strike, Bank, Strike, protest, privatisation bid, Nationalised banks,

சென்னை : வங்கிகள் தனியார் மயமாக்கத்தை அனுமதிக்கும், வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு, வரும் 16, 17ம் தேதிகளில், 'ஸ்டிரைக்' அறிவித்துள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச்செயலர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது: இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா - 2021, பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது.


latest tamil newsஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 16, 17 என இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramanathan - Ramanathapuram,இந்தியா
02-டிச-202108:14:48 IST Report Abuse
ramanathan மத்திய அரசு இதை பத்தாண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
01-டிச-202114:31:19 IST Report Abuse
A.Gomathinayagam அரசுடைமையாக்க பட்ட வங்கிகள் தான் கன்யாகுமரியில் இருந்து காஸ்மீர் வரை ஒவ்வொரு கூக்கிரமங்களிலும் மக்கள் பணியாற்றுகிறது. நாற்பத்தி நான்கு கோடி சன் தன் கணக்குகளில் தொன்னூறு விழுக்காடு தேசியமய மாக்க பட்ட வங்கிகள் தான் திறந்து சாமான் யனுக்கு சேவை புரிகிறது சைபர் பண இருப்பு ,ஏடிஎம் அட்டை என சேவை செய்வது ,அரசிற்கு நெருக்கடி காலத்தில் உதவுவதும் இவர்களே .உதாரணம் பண மதிப்பீடு இழப்பு காலத்தில்
Rate this:
Cancel
Kalyanam Siv - Chennai,இந்தியா
01-டிச-202109:03:52 IST Report Abuse
Kalyanam Siv அரசுடமை வங்கிகள் எந்த நோக்கத்திற்காக அரசுடமை ஆக்க பட்டதோ அதனை கடமையாக கொண்டுள்ளனரா? சகட்டு மேனிக்கு நீரவ் போன்றவர்களுக்கு கடனை கொடுத்து, மக்களின் தலைக்கு கடன் சுமையை ஏற்றினார்கள். இவர்களால் யாருக்கு நன்மை? எளியவர்கள் வங்கியை எளிதாக அணுகி பயன் பெற முடிகிறதா? ஊழல் செய்யத்தான் அரசுடமை ஆக்கப்பட்டதா? இது நம் தேசத்திற்கும், மக்களுக்கும் தான் பெரிதான சுமை. தனியார் வங்கிகள் ஊழல் செய்தால் அதனால் பாதிக்க படுவது அந்த வாங்கித்தான், மேலும் பங்குதாரர்களும் வாடிக்கையாளர்களும் பாதிக்கபடுவர். ஆனால் அரசுடமை வங்கி ஊழல் செய்தால் , மக்களின் வரிப்பணத்தில் தானே சுமை கூடுகிறது. ஆகையால் தனியார் மாயம் ஆவதால், உரிய பொறுப்பு நிர்ணயிக்க படுகிறது , மேலும் இவ்வங்கிகள் வாடிக்கையாளர்களை மதிக்கிறதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X