ஐ.ஐ.டி.,யில் தலித் மாணவி சேர்க்கை; கட்டணம் செலுத்த முன்வந்த நீதிபதி

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
அலகாபாத்: உத்தர பிரதேசத்தில் தலித் மாணவியின் ஐ.ஐ.டி., சேர்க்கை, கட்டணம் செலுத்தாததால் பறிபோனது. அவருக்கு சிறப்பு இடம் ஒதுக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, அதற்கான கட்டணத்தை தானே செலுத்துவதாக கூறினார்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த தலித் மாணவி சமஸ்கிருதி ரஞ்சன், பிளஸ் 2வில் 94 சதவீத மதிப்பெண் பெற்றார்.
High Court, IIT, Admission Fee, Helps, Dalit Girl, IIT BHU, ஐஐடி, தலித் மாணவி, சேர்க்கை, கட்டணம், நீதிபதி

அலகாபாத்: உத்தர பிரதேசத்தில் தலித் மாணவியின் ஐ.ஐ.டி., சேர்க்கை, கட்டணம் செலுத்தாததால் பறிபோனது. அவருக்கு சிறப்பு இடம் ஒதுக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, அதற்கான கட்டணத்தை தானே செலுத்துவதாக கூறினார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த தலித் மாணவி சமஸ்கிருதி ரஞ்சன், பிளஸ் 2வில் 94 சதவீத மதிப்பெண் பெற்றார். ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில், 92.77 சதவீத மதிப்பெண் பெற்றதால், வாரணாசி ஐ.ஐ.டி.,யில் ஆதிதிராவிடர் இட ஒதுக்கீட்டில் கணிதம் மற்றும் கணினி முதுகலை பட்டப்படிப்பில் அவருக்கு இடம் கிடைத்தது. மாணவி 15 ஆயிரம் ரூபாய் செலுத்தி, தனக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும் என ஐ.ஐ.டி., அறிவுறுத்தியது.


latest tamil news


இதற்கிடையே சமஸ்கிருதியின் தந்தைக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என டாக்டர்கள் கூறியதுடன், வாரம் இரு முறை 'டயாலிசிஸ்' அவசியமானது.இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, ஐ.ஐ.டி.,யில் பணம் செலுத்தி தன் இடத்தை உறுதி செய்ய மாணவியால் முடியவில்லை. இது தொடர்பாக மாணவியும், அவரது தந்தையும் ஐ.ஐ.டி.,க்கு பலமுறை கடிதம் எழுதியும் பதில் இல்லை. இதையறிந்த வழக்கறிஞர்கள் சிலர், பிரச்னையை அலகாபாத் உயர் நீதிமன்றம் கொண்டு சென்றனர்.

இது தொடர்பான மனு, நீதிபதி தினேஷ்குமார் சிங் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி செலுத்த வேண்டிய 15 ஆயிரத்தை, தன் சொந்த பணத்தில் இருந்து செலுத்துவதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், ''ஐ.ஐ.டி., வாரணாசியில் மாணவி கல்வியை தொடர வாய்ப்பளிக்க வேண்டும். காலியிடங்கள் நிரப்பப்பட்டு இருப்பினும், மாணவிக்கு சிறப்பு இடம் உருவாக்க வேண்டும்,'' என்றும் நீதிபதி தினேஷ்குமார் சிங் உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-ஜன-202201:02:47 IST Report Abuse
DARMHAR பாராட்டுக்குரிய சமூக நல்லிணக்கம் கொண்ட நீதி அரசர்.
Rate this:
Cancel
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
01-டிச-202117:03:14 IST Report Abuse
S.PALANISAMY சாதி வெறி பிடித்த உ.பி யில் இப்படி ஒரு நீதி அரசரா? வாழ்க அவர் புகழ் வளர்க்க அவரது மரபு.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
01-டிச-202116:23:59 IST Report Abuse
DVRR To pursue a dual degree Mathematics and Computing (Bachelors and Masters in Technology) மேலே முதுகலை என்று எழுதியிருப்பது தவறானது +2 படித்தவர்களுக்கு இளங்கலை தான் முதுகலை இளங்கலை முடித்தவுடன் தான். ரூ 15,000 என்பது நான் சேருகின்றேன் என்று ஒப்புதல் கொடுப்பதற்கு பிறகு தலித் என்பதால் ஸ்காலர்ஷிப்........அது இல்லையென்றால் இந்த நீதிபதி ஏதேனும் உதவி செய்வாரா???ஒரு நீதிபதிக்கு (ரூ 2.5 லட்சம் சம்பளம் மாதம்)ரூ 15,000 பெரிய விஷயமே இல்லை இருந்தாலும் இந்த உடனடி உதவிக்கு அவரை பாராட்டவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X