கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசு இடத்தை ஆக்கிரமித்து சர்ச்: துணை போன தாசில்தார்; இடித்து அகற்ற ஐகோர்ட் உத்தரவு

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை: தாசில்தாரின் ஆசிர்வாதத்துடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, கிறிஸ்துவ மத போதகர் கட்டிய சர்ச் கட்டடத்தை இடிக்க, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலுார் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தாக்கல் செய்த மனு: ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பென்னலுார் கிராமத்தில் உள்ள அரசு நிலம், மயானமாக
Chennai HC, Order, Church, சென்னை, ஐகோர்ட், உயர்நீதிமன்றம், சர்ச், ஆக்கிரமிப்பு

சென்னை: தாசில்தாரின் ஆசிர்வாதத்துடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, கிறிஸ்துவ மத போதகர் கட்டிய சர்ச் கட்டடத்தை இடிக்க, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலுார் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தாக்கல் செய்த மனு: ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பென்னலுார் கிராமத்தில் உள்ள அரசு நிலம், மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மயானம் செல்வதற்கான வழியை ஆக்கிரமித்து தேவாலயம் கட்ட, 2004ம் ஆண்டில் முயற்சி நடந்தது. கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சர்ச் கட்டவில்லை.

கடந்த 2013ம் ஆண்டில், மீண்டும் சர்ச் கட்ட முயற்சி நடந்தது. உடனடியாக மனு அளிக்கப்பட்டது. கட்டுமான பணிகளை நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இரவு நேரத்தில் கட்டுமானம் நடந்தது. மாவட்ட நிர்வாகம் தரப்பில் தீவிரமாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மயானம் என வகுக்கப்பட்ட பகுதியை, அப்படியே பராமரிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


கிறிஸ்துவ மத போதகர் தரப்பில், 'எட்டு ஆண்டுகளாக சர்ச் இயங்கி வருகிறது. சிறிய அளவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, சர்ச் நடவடிக்கைகள் தொடர அனுமதிக்க வேண்டும்' என கூறப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் 'குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடத்தை, மயானமாக பயன்படுத்தவில்லை. கிராம மக்களும், தீவிர எதிர்ப்பு தெரிவிக்கவில்லை' என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் தாக்கல் செய்த பதில் மனுவை பரிசீலிக்கும் போது, ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கடமை, அரசு அதிகாரிகளுக்கு உள்ளது. யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால், அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அனுமதிக்கலாமா. குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடம், மேய்க்கால் புறம்போக்கு என உள்ளது. இதை, மத போதகர் ஆக்கிரமித்து கட்டட அனுமதி பெறாமல் கட்டுமானம் மேற்கொண்டுள்ளார்.

ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்ட விரோத நடவடிக்கையை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை, நான்கு வாரங்களுக்குள் இடிக்க வேண்டும். வேறு நிலம் இருந்தால், கட்டுமானம் எழுப்ப அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். அதிகாரிகளின் மெத்தனம், கடமை தவறியது குறித்து விசாரணை நடத்த, கலெக்டருக்கு உத்தரவிடப்படுகிறது. ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டு இருந்தால், கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
02-டிச-202119:21:36 IST Report Abuse
RaajaRaja Cholan ஒருவேளை அந்த தாசில்தார் ...யா , இல்லை...ள் கூலியா
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-டிச-202118:05:04 IST Report Abuse
sankaseshan இன்று கிடைத்த முக்கிய செய்தி உத்தரகண்ட் அரசு ஹிந்து ஆலயங்களின் நிர்வாகத்திலிருந்து விலக்கிக்கொண்டு பக்தர்களின் உரிமையை நிலை நிறுத்தியுள்ளது தமிழ்நாடு ஊடகங்களில் Sollamaattaarkal
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
01-டிச-202117:03:32 IST Report Abuse
DVRR சேகர் பாபர் ஹுமாயுன் இதைப்பற்றி ஒரு வார்த்தை நீ சொல்லவில்லை ஓஹோ கிறித்துவ பிச்சையில் நடக்கும் ஆட்சியாயிர்றே அதனால் தானே சரி சரி சரி
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
05-டிச-202106:39:24 IST Report Abuse
NicoleThomsonவெல்க பிச்சை எடுத்து வாழும் கார்பொரேட் குடும்பம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X