கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தலாமே....

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தமிழக பா.ஜ., பிரமுகர் 'கராத்தே' தியாகராஜன் பேச்சு: தமிழகத்தில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அனைவரின் பைலும், பா.ஜ., தலைவர் அண்ணாமலை வசம் உள்ளது. பென்ஷனும் கிடைக்காது; புரமோஷனும் கிடைக்காது... அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். நீங்க நினைச்ச மாதிரி ரவுடியிசம் பண்ண முடியாது; அதுக்கு எங்க கட்சியிலேயே நிறைய பேர் இருக்காங்க.'அண்ணாமலைக்கு அரோகரா' பாடாமல், கட்சி வளர்ச்சி
பேச்சு_பேட்டி_அறிக்கை, கராத்தே தியாகராஜன், பாஜ, பாஜக

தமிழக பா.ஜ., பிரமுகர் 'கராத்தே' தியாகராஜன் பேச்சு: தமிழகத்தில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அனைவரின் பைலும், பா.ஜ., தலைவர் அண்ணாமலை வசம் உள்ளது. பென்ஷனும் கிடைக்காது; புரமோஷனும் கிடைக்காது... அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். நீங்க நினைச்ச மாதிரி ரவுடியிசம் பண்ண முடியாது; அதுக்கு எங்க கட்சியிலேயே நிறைய பேர் இருக்காங்க.


'அண்ணாமலைக்கு அரோகரா' பாடாமல், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தலாமே. இதெல்லாம் திராவிட கட்சிகளின் தனிமனித துதி. பா.ஜ.,வில் இது வழக்கமாக இருக்காது. இப்போது வந்து விட்டதோ!



அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: தமிழக கவர்னரை முதல்வர் சந்தித்து, என்ன பேசினார் என்பது குறித்து, கவர்னர் மாளிகை ஒரு விதமாகவும், முதல்வர் அலுவலகம் வேறு விதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


இது வழக்கமானது தானே... கவர்னர் மாளிகைக்கு வெளியே வீராவேசமாக பேசும் நம் அரசியல் தலைவர்கள், அவரை சந்திக்கும் போது, பம்முவதும், சந்தித்த விபரத்தை மாற்றிச் சொல்வதும் வழக்கம் தானே!



தமிழ்நாடு அரசு பேரூராட்சி பணியாளர் சங்க மாநிலத்தலைவர் ரா.பிச்சைமுத்து பேட்டி: மக்களால் தலைவர்களை நேரடியாக தேர்வு செய்யும் வகையில், பேரூராட்சி தேர்தல்களை தமிழக அரசு நடத்த வேண்டும். மேலும் தேர்தலுக்கு முன், 500 பணியாளர்கள், 600 கணினி ஆப்பரேட்டர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.


அப்படி பணி நிரந்தரம் செய்தால் தான், தேர்தலில் பணியாற்றுவோம் என்றும் சொல்லி விட வேண்டியது தானே!



திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை:
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தொழிற்சாலைகள் புதிதாக துவங்க முடியாத அளவுக்கு லஞ்ச லாவண்யம் இருந்தது. தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தை நோக்கியே தொழிற்சாலைகள் வருகின்றன. பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது.


latest tamil news




மழை பெய்து, நாடே வௌ்ளக் காடாக உள்ளது. இதில் எங்கு புதிய தொழிற்சாலைகள் வருகின்றன என்பதை விபரமாக சொன்னால் நன்றாக இருக்கும்!



தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பேட்டி: தற்போது, 36 மணி நேரம் தான் பயிர்கள் தண்ணீரில் தாக்கு பிடிக்கும் அளவுக்கு உள்ளது. அரசு, 10 முதல், 15 நாட்கள் வரை தாக்கு பிடிக்கும் அளவுக்கான பயிர்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வு முறைகளில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.


ஏன், எத்தனை நாட்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தாலும் தாக்குபிடிக்கும் வகையில் பயிர்களை கண்டுபிடிக்க வேண்டியது தானே... அப்படி செய்தால் தான், எதிர்காலத்தில் விவசாயம் சரிப்பட்டு வரும் போலிருக்குது வெள்ள நிலைமைகளில்!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
01-டிச-202111:16:28 IST Report Abuse
sankar "10 முதல், 15 நாட்கள் வரை தாக்கு பிடிக்கும் அளவுக்கான பயிர்களை வழங்க வேண்டும்"- அதுக்கு பனை மரம் - தென்னை மரம் இவைதான் சரி
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
01-டிச-202111:15:00 IST Report Abuse
sankar "தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தை நோக்கியே தொழிற்சாலைகள் வருகின்றன"- கோமாவுல இருக்காரு போல
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
01-டிச-202111:13:38 IST Report Abuse
sankar "கவர்னர் மாளிகைக்கு வெளியே வீராவேசமாக பேசும் நம் அரசியல் தலைவர்கள், அவரை சந்திக்கும் போது, பம்முவதும்"- உள்ளதை உள்ளபடி சொன்னதற்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X