பொது செய்தி

இந்தியா

இரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி., வளர்ச்சி 8.4 சதவீதம்

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு உற்பத்தி அதிகரிப்பு, சேவைகள் துறையில் தேவை அதிகரிப்பு, கடந்த ஆண்டின் குறைந்த அடிப்படை மற்றும் தடுப்பூசி போடுவது அதிகரித்தது ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்தன என, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டின்,
Q2, GDP, Growth, Government, ஜிடிபி, வளர்ச்சி, இந்தியா

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு உற்பத்தி அதிகரிப்பு, சேவைகள் துறையில் தேவை அதிகரிப்பு, கடந்த ஆண்டின் குறைந்த அடிப்படை மற்றும் தடுப்பூசி போடுவது அதிகரித்தது ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்தன என, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், வளர்ச்சி 20.1 சதவீதமாக இருந்தது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 24.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



முக்கிய 8 துறைகள்


நாட்டின் முக்கிய 8 துறைகள், கடந்த அக்டோபரில் 7.5 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளன. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை, முக்கிய 8 துறைகளாக கருதப்படுகிறது. இவை, நாட்டின் தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில், 40.27 சதவீத பங்களிப்பை கொண்டு உள்ளன.கடந்த செப்டம்பரில், இந்த 8 துறைகளின் வளர்ச்சி 4.5 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், உற்பத்தி வளர்ச்சி 15.1 சதவீதமாக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், மைனஸ் 12.6 சதவீதமாக சரிவைக் கண்டிருந்தது என, மத்திய வர்த்தம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news



நிதிப் பற்றாக்குறை


கடந்த அக்டோபர் வரையிலான காலத்தில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் இலக்கில், 36.3 சதவீதமாக குறைந்து உள்ளது. இதற்கு வருவாய் வசூலில் முன்னேற்றம் இருந்தது காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சில்லரை விலை பணவீக்கம்


தொழிற்சாலை ஊழியர்களுக்கான சில்லரை விலை பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் சற்று அதிகரித்து, 4.5 சதவீதமாக உள்ளது. கடந்த செப்டம்பரில் இது 4.41 சதவீதமாக இருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
01-டிச-202110:38:56 IST Report Abuse
Tamilan கேஸ், பெட்ரோலியத்தின் அபரிமித விலைகளும் இந்த வளர்ச்சியின் அங்கம். 25% தொலைத்தொடர்பு விலை உயர்வும் வரும் காலாண்டின் வளர்ச்சியின் அங்கமாகும். விலைகள் ஏற ஏற அதற்கேற்றவாறு பொருளாதாரம் வளர்ந்துவிடும்.
Rate this:
01-டிச-202114:02:23 IST Report Abuse
ஆரூர் ரங்விலை உயர்ந்தால் நுகர்வு குறைந்து வரி வசூல் பாதாளத்திற்கு 😪போயிருக்க வேண்டுமே. ஆனால் கச்சா எண்ணெய் கேஸ் இறக்குமதி எப்படி வேகமாக அதிகரித்துள்ளது? நுகர்வு அதிகரித்து வருகிறது என்பதால்தானே? கொஞ்சம்😔 பொருளாதாரம் படியுங்க பிளீஸ்...
Rate this:
Cancel
01-டிச-202109:53:13 IST Report Abuse
அப்புசாமி வளர்ச்சி 9.5 சதவீதமா இருக்கும்னு நிதியமைச்சர் சொல்லிக் கிட்டிருந்தாரே... சக்தி தாஸ் 10.5 சதவீதம். பண்வீக்கம் இல்லை. எல்லோரும் முதலீட்டுக்கு ரெடியாகுங்கன்னு சொன்னாங்களே கோபால்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X