பொது செய்தி

இந்தியா

எஸ்.பி.ஐ.,கார்டு கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு

Added : டிச 01, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: எஸ்.பி.ஐ., வங்கியின், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள், மாத தவணை முறையில் பொருட்களை வாங்கும்போது, இன்று முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.கடைகள், மின்னணு வர்த்தக தளங்கள், செயலிகள் ஆகியவற்றின் வாயிலாக எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டை பயன்படுத்தி மாத தவணை திட்டத்தில் பொருட்களை வாங்கும்போது, இன்று முதல், கூடுதலாக செயல்பாட்டுக் கட்டணமாக, 99 ரூபாய்
SBI, Credit Card, Charger, Purchase, Increase, December1, எஸ்பிஐ, கிரெடிட் கார்டு, கட்டணம், உயர்வு

புதுடில்லி: எஸ்.பி.ஐ., வங்கியின், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள், மாத தவணை முறையில் பொருட்களை வாங்கும்போது, இன்று முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.

கடைகள், மின்னணு வர்த்தக தளங்கள், செயலிகள் ஆகியவற்றின் வாயிலாக எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டை பயன்படுத்தி மாத தவணை திட்டத்தில் பொருட்களை வாங்கும்போது, இன்று முதல், கூடுதலாக செயல்பாட்டுக் கட்டணமாக, 99 ரூபாய் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, கூடுதல் வரியும் வசூலிக்கப்படும் என எஸ்.பி.ஐ., தெரிவித்துஉள்ளது. கடந்த சில நாட்களாகவே இது குறித்த அறிவிப்பை எஸ்.பி.ஐ., கார்டு நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வருகிறது.


latest tamil news


இதையடுத்து, பி.என்.பி.எல்., எனும், 'முதலில் வாங்குங்கள்; பின் செலுத்துங்கள்' திட்டத்தின் கீழ், எஸ்.பி.ஐ., கார்டை பயன்படுத்தி, தவணை முறையில் பொருட்களை வாங்குவது, கூடுதல் செலவு பிடிப்பதாக இருக்கும். வியாபார நிறுவனங்கள் பூஜ்ய செலவிலான மாத தவணை திட்டத்தை வழங்கினாலும், எஸ்.பி.ஐ., கார்டு வாடிக்கையாளர்கள், இன்று முதல், 99 ரூபாய் மற்றும் வரி ஆகியவற்றை செலுத்தியே ஆக வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
01-டிச-202120:20:30 IST Report Abuse
M  Ramachandran கிரெடிட் கார்டுகளேயா மொலாசம். சமீபத்தில் நான் அதைய நிறுத்திவிட்டான். முப்பது ஆண்டுகளுக்கு மேல் உபயோக படுத்தி கொண்டிருந்தேனான் சமீப கால் நடவடிக்கைகள் சரி இல்லைய. மேலும் ஒவொரு ஆண்டும் அதன் சந்த ஏமாறி கொண்டேனா போலாகிறது. முதலில் அவர்கள் காட்டுமில்லாமல் வீட்டுக்கென வந்து விநியோகித்தார்கள் .. கடந்த பதினைந்து வருடங்களாக வருட சந்த வசூலித்து கொண்டிருந்தார்கள். படிப்படியாக நாம் உபயோகப்படுத்த விட்டாலும் ஏற்றிக்கொண்டே போனார்கள். முடிவு கட்டி விட்டான். இனிமேல் க்ரெடிட் கார்டு பக்கமென போவதில்லை என்று. வட்டி வசூல் அநியாயம்.ரூபாய் யிருப்பதின்மூன்றாயிரத்து மூன்று மாதத்தில் எண்பதாயிரம் வசூலித்தார்கள் இந்த யேசஎஸ்பி யை.
Rate this:
Cancel
01-டிச-202112:50:27 IST Report Abuse
ஆரூர் ரங் SBI தருவது VISA எனும் அன்னிய😉 கார்பரேட் கம்பெனி கார்டு. டுமீல்ஸ்😶 அதனைப் புறக்கணிக்கலாமே
Rate this:
Cancel
01-டிச-202112:49:59 IST Report Abuse
ஆரூர் ரங் வங்கி இணையப் பாதுகாப்பு முன்பை விட இப்போது மிக செலவு பிடிக்கிறது. வைரஸ் தாக்குதல் தடுப்பு 😛மற்றும் கார்டு இன்சூரன்ஸ் செலவு கூடுதலாக ஆகிவிட்டது. அரசே கட்டணமில்லா RuPay அட்டையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அது பிரபலமாக வில்லை. மக்கள்தான் முதலில் திருந்த வேண்டும். கடன் அட்டை கலாச்சாரம் நடுத்தர மக்கள்க்கு நல்லதல்ல .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X