பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் கொடுத்தது 100 நாட்கள், உருண்டு ஓடிவிட்டது 200 நாட்கள்: பொறுமையிழக்கும் போக்குவரத்து ஓய்வூதியர்கள்

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
மதுரை: 'தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப் படியை 100 நாட்களில் வழங்குவதாக உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின், 200 நாட்களை தாண்டியும் எங்களை கண்டுகொள்ளவில்லை' என ஓய்வூதியர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்கள் மிகக் குறைவான அகவிலைப்படி பெற்று வந்த
போக்குவரத்து, ஓய்வூதியர்கள், ஸ்டாலின், முதல்வர்

மதுரை: 'தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப் படியை 100 நாட்களில் வழங்குவதாக உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின், 200 நாட்களை தாண்டியும் எங்களை கண்டுகொள்ளவில்லை' என ஓய்வூதியர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்கள் மிகக் குறைவான அகவிலைப்படி பெற்று வந்த நிலையில், 1998 முதல் அப்போதய முதல்வர் கருணாநிதி முயற்சியால் அகவிலைப்படி உயர்வுடன் கூடிய பென்ஷன் பெற்று வருகின்றனர். அரசு சார்பில் 2015 மற்றும் 2016ல் எடுக்கப்பட்ட முடிவுகளால் தற்போது வரை ஒருவருக்கு ரூ.6 - 10 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுகிறது. இதைப்பெற ஆறு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. விலை உயர்வால் கடும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்.


latest tamil news


இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக பென்ஷனர் நலச்சங்க தலைவர் கதிரேசன் கூறியதாவது: அகவிலைப்படி உயர்வு 2015 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் வழங்கி விடுவோம்; கவலை வேண்டாம்' என தேர்தலுக்கு முன் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து 200 நாட்களை கடந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. முதல்வர் தனிப்பிரிவிற்கும் ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் தங்கள் மனக்குமுறலை தொடர்ந்து புகார் மனுவாக பதிவு செய்து வருகின்றனர். இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
07-டிச-202103:59:44 IST Report Abuse
meenakshisundaram அரசு இயங்க முக்கிய அங்கமாக விளங்கும் ஊழியர்களின் பஞ்சப்படி ஸ்டாலின் அப்பா காலத்திலே அமலாக்கப்பட்ட -மத்திய ,மாநில அரசு ஊழியர்களுக்கு சம விகித பஞ்சப்படி கொள்கை என்னாச்சு ?மேலும் ஓய்வூ தியம் பெறுவோரிடம் சத்தமின்றி வைத்திய செலவு பிடித்தம் அவசியமின்றி அதிகரிக்கப்பட்டது ஏன் ?இதற்கு அரை பக்க விளம்பரமாவது கொடுத்தார்களா ?ஸ்டாலின் இதை ''ஆய்வு '' செயதாரா ?
Rate this:
Cancel
Guru Rajan - coimbatore,இந்தியா
01-டிச-202117:50:22 IST Report Abuse
Guru Rajan தேதி சொன்னோமா
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
01-டிச-202116:42:21 IST Report Abuse
anbu ஆமா சொன்னோம . எத்தனை நூறு நாட்கள் என்று குறிப்பிட்டு சொன்னோமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X