பொது செய்தி

இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பால் மத்திய அரசின் வருவாய் இரு மடங்குக்கு மேல் அதிகரிப்பு

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பால் மத்திய அரசின் வருவாய் இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதில்: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பதால் மத்திய அரசுக்கு 2020 - 21ம் நிதியாண்டில் 3.72 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது; கடந்த 2௦19 - 2௦ம் நிதியாண்டில் 1.78 லட்சம் கோடி
Govt, Excise Tax, Doubles, Petrol, Diesel, FY21, Centre, மத்திய அரசு, கலால் வரி, பெட்ரோல், டீசல், வருவாய், இருமடங்கு

புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பால் மத்திய அரசின் வருவாய் இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதில்: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பதால் மத்திய அரசுக்கு 2020 - 21ம் நிதியாண்டில் 3.72 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது; கடந்த 2௦19 - 2௦ம் நிதியாண்டில் 1.78 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்த வருவாய் அதிகரிப்புக்கு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பு உயர்த்தப் பட்டதே காரணம்.


latest tamil news


கடந்த 2019ல் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 19.98 ரூபாயாகவும், டீசல் மீதான கலால் வரி 15.83 ரூபாயாகவும் இருந்தன. இதன்பின் 2020ம் ஆண்டில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 32.98 ரூபாயாகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 31.83 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டன. எனினும் இம்மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டன. பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரி வசூலில், மாநிலங்களுக்கு 2020 - 21ம் நிதியாண்டில் 19 ஆயிரத்து 972 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
01-டிச-202118:26:28 IST Report Abuse
Suri /// பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரி வசூலில், மாநிலங்களுக்கு 2020 - 21ம் நிதியாண்டில் 19 ஆயிரத்து 972 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.// இது எப்பேர்ப்பட்ட களவாணித்தனம் தெரியுமா? இவர்களே பெட்ரோல் டீசலை GST க்குள் கொண்டுவர கூறுவார்கள். ஆனால் இவர்களே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் விகிதத்த இப்படி அநியாயமாக குறைப்பார்கள். இப்படிப்பட்ட செய்கைகள் நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் என்பது கூட தெரியாதவர்கள் தான் ஆட்சி நடத்துகிறார்கள்.
Rate this:
Cancel
01-டிச-202118:23:07 IST Report Abuse
அப்புசாமி உருவறதுல ஏழைப்பங்களர் அரசும், விடியல் அரசும் ஒண்ணுக்கொன்னு சளைச்சதில்லை. நடத்துங்க... நடத்துங்க.
Rate this:
Cancel
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
01-டிச-202117:20:45 IST Report Abuse
S.PALANISAMY 1/11/2021 அன்று குருடாயில் விலை ( ஒரு பேரல்): 84.15 USD இன்று 1/12/21 ஒரு பேரல் : 68.15 பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை. கொள்ளை அடித்து பெரு முதலாளிகளுக்கு சொத்து சேர்க்கிறார்கள். மக்கள் இதை புறியது கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X