அரசியல் செய்தி

தமிழ்நாடு

தை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமா?: எதிர்ப்பை மடைமாற்ற ஸ்டாலின் நாடகம்!

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (49+ 6)
Share
Advertisement
தமிழக அரசு வழக்கம் போல இந்த ஆண்டும், ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசு பை கொடுக்க உள்ளது. பொங்கல் பரிசுக்கான துணி பை வடிவமைக்கப்பட்டு, அதன் மாதிரியை அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழக அரசு முத்திரை மட்டுமே இருக்கிறது; முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை; அவரது பெயர் உள்ளது. ஆனால், 'தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்' என்ற, வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.கடந்த 2011ல்,
தை, தமிழ் புத்தாண்டு, ஸ்டாலின், பொங்கல் பரிசு, பை, நாடகம்

தமிழக அரசு வழக்கம் போல இந்த ஆண்டும், ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசு பை கொடுக்க உள்ளது. பொங்கல் பரிசுக்கான துணி பை வடிவமைக்கப்பட்டு, அதன் மாதிரியை அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழக அரசு முத்திரை மட்டுமே இருக்கிறது; முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை; அவரது பெயர் உள்ளது. ஆனால், 'தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்' என்ற, வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2011ல், 'ஏப்ரல் 14ல் தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும்' என, அப்போதைய அ.தி.மு.க., அரசு அறிவித்தது. மீண்டும் எங்கேயிருந்து தை முதல் நாள், தமிழ் புத்தாண்டு நாளாக வருகிறது என்று கேட்டால், 'அதற்கான அரசு அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்கின்றனர் தமிழக அரசு அதிகாரிகள். இது குறித்து, தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது: கேபிடலிசம், கம்யூனிசம், மாவோயிசம் என, பல இசங்களை பார்த்திருக்கிறோம். புதிதாக இப்போது தி.மு.க.,யிசம் வந்திருக்கிறது. எல்லா விஷயங்களிலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், ஆளும் கட்சியாக வந்தால், அதற்கு நேர் மாறான நிலைப்பாடும் எடுத்து செயல்படுவதே தி.மு.க.,யிசம்.


latest tamil newsதிரித்து கூறுவார்கள்


இதை இடித்து கூறுவோர் மீது அவதுாறு பரப்புவதும், தி.மு.க.,வின் வேலையாகி இருக்கிறது. ஏற்கனவே மழை, வெள்ளத்தின் போது, எதிர்கட்சியாக இருந்த தி.மு.க., ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியது. அதே குற்றச்சாட்டுக்கள் இன்றைய தி.மு.க., அரசு மீதும் உள்ளன. அதை சொன்னால், ஏற்காத போக்கு தி.மு.க.,விடம் உள்ளது. தேர்தல் வெற்றி, நோய் தொற்று பரவல், விளையாட்டு, யுத்தம், தேர்வில் வெற்றி போன்றவற்றை குறிப்பிடும் போது, வரலாற்றை புரட்டி போட்டது என்பார்கள். ஆனால், தி.மு.க.,வினர் வரலாற்றை புரட்டி போடமாட்டார்கள்.

வரலாற்றையே பொய்யும், புரட்டுமாக திரித்து கூறுவார்கள்; அதன்படியே செயல்படுவார்கள். அப்படித்தான், கருணாநிதி ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, அவரது ஆட்சியின் மீது குற்றச்சாட்டுக்கள் அணி வகுத்தன. உடனே, அதை மடை மாற்ற, 'தைத்திங்கள் முதல் நாள், தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படும்' என 2008ல் அறிவித்தார். அப்போதே, வரலாற்று ஆய்வாளர்களும், சமூக அறிஞர்களும் கண்டனத்தை பதிவு செய்தனர். அன்று தந்தை வழிநடத்திய அரசுக்கு இருந்த கெட்ட பெயர், இப்போது தனயன் வழிநடத்தும் அரசுக்கும் ஏற்பட்டிருக்கிறது. வெள்ள நிவாரண பணிகளில், அரசுக்கு ஏகப்பட்ட கெட்டப் பெயர் உள்ளது.


latest tamil newsஏற்புடையது அல்ல


அதை மடை மாற்றம் செய்ய, தந்தை வழியிலேயே தனயனும் புறப்பட்டு விட்டார். தைத்திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப் போவதாக அறிவிக்க உள்ளனர். அதன் முதல்படிதான், பொங்கல் பையில், 'தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்' என, முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியாக, மக்கள் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல், பழைய பஞ்சாங்கத்தையே மீண்டும் எடுத்து வந்து விவாதத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்; அது போணியாக போவதில்லை.

பொங்கல் பையில் முதல்வர் படம் போடவில்லை. அது எங்கள் பெருந்தன்மை என தி.மு.க.,வினர் பெருமை பேசுகின்றனர். முதல்வராக பழனிசாமி இருந்த போது, அவரது படம் போட்டு நிவாரண பைகள் தயார் செய்வதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனத்தை பதிவு செய்தது. அரசின் நிவாரண பை மற்றும் பொங்கல் பரிசு பையில், முதல்வர் படம் போட்டால், கோர்ட் உத்தரவுக்கு எதிராக போகும் என்பதால் படம் போடவில்லை. அதை பெருந்தன்மை என்று சொல்லி பெருமை பேசுவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு எஸ்.ஆர்.சேகர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (49+ 6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswaran - Tirupur,இந்தியா
15-ஜன-202210:47:19 IST Report Abuse
Eswaran தை மாதம் 1-ம் தேதி சூரியன் தென் திசையில் (தட்சியாயணம்) இருந்து வட திசை (உத்திராயணம்) நோக்கி நகர்கிறது. ஆறு மாதம் சென்று வட திசையில் இருந்து தென் திசை நோக்கி நகர்ந்து, மார்கழி மாதக்கடைசியில் தேதி தென் திசையை அடைந்து மீண்டும் வட திசை நோக்கி நகர்கிறது. இதுவே ஒரு ஆண்டு என்பதற்கு பொருத்தமானது. மேலும் தை மாதம் தான் வளமையான மாதம் மட்டுமல்ல, மக்கள் வாழ்வில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொலவடைகூட, புத்தாண்டான தை மாதம் பிறக்கும் போது மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், வளர்ச்சியும் ஏற்படும் என்பதை குறிக்கும். சித்திரை மாதம் வரும்போது வெய்யில் கொளுத்தும்.மக்களை வாட்டி எடுக்கும். இந்த மாதத்தை யாராவது புத்தாண்டு என கொண்டாடமுடியுமா? மேலும் ஒவ்வொரு தமிழ் ஆண்டுக்கும் ஒரு சமஸ்கிருத பெயரால் அழைக்கும் வழக்கத்தை தமிழகத்தில் பிற நாட்டு அரசர்களின் ஆட்சியின் போது பிராமணப் பண்டிதர்களால் வட நாட்டு சமஸ்கிருத முறையை அரசர்கள் மூலம் தமிழ் நாட்டில் புகுத்தியுள்ளார்கள். மேலும் தமிழ் ஆண்டினை அறுபது ஆண்டுகள் பிரபவ தொடங்கி அட்சய என சுழற்சி முறையில் வைத்துள்ளார்கள். இந்த அறுபது பெயர்களும் கிருஷ்ணருக்கும் நாரதருக்கும் பிறந்த குழந்தைகளின் பெயர்கள்.இது அசிங்கமான புராணக்கதை. இதைத்தமிழன் மீது திணித்துள்ளார்கள். கிரிகேரியன் நாட்காட்டி இருப்பதால் நமது பிறந்த ஆண்டினைக்கணக்கிடமுடிகிறது. இல்லையேல் அம்போதான் உதாரணமாக ஒருவர் விக்ருதி ஆண்டு மாசி மாதம் மூன்றாம் நாள் பிறந்தார் என்றால் அவர் வயது என்ன?
Rate this:
Cancel
Annan - Madurai,இந்தியா
02-டிச-202101:43:54 IST Report Abuse
Annan ஒவ்லொரு பண்டிகைக்கும் அது கொண்டாடப்படுவதற்கான காலமும் காரணமும் கதையும் இருக்கும். இந்தியாவில் உள்ள பண்டிகைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக குறிப்பிட்ட ஓரு மாதத்திலோ தேதியிலோ திதியிலோ கொண்டாடப்படுகிறது. அந்த அடிப்படையில் தமிழ், மலையாளம் மற்றும் சில நாடுகளின் புத்தாண்டுகள் சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டு சித்திரை முதல் நாளிலும், சூரியன் உச்சமாகும் இதே கால கட்டத்தில் தெலுங்கு புத்தாண்டு சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்ட திதியின் அடிப்படையில் சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும் அமாவாசை திதிக்கு அடுத்த நாளான பிரதமையில் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் என்பதை அடிப்படையாக கொண்ட ஆங்கில புத்தாண்டு இயேசுவின் பிறந்த நாளை புத்தாண்டாக கொண்டாடாமல் அவருக்கு இயேசு கிறிஸ்து என்று பெயர் வைத்த 7-ம் நாளை புத்தாண்டின் தொடக்கமாக அவர் பிறந்து 200 ஆண்டுகளுக்கு பின் வந்தவர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டது.......ஒரு வட்டத்திற்கு தொடக்கமோ முடிவோ கிடையாது. பூமி சூரியனை ஒரு வட்டப்பாதையில் சுற்றி வர ஓர் ஆண்டு (12 மாதங்கள்) ஆகிறது. அதில் எந்த மாதத்தை ஆண்டின் தொடக்கமாக வைத்துக் கொள்வது. வானியலிலும் ஜோதிடத்திலும் இந்த 12 மாதங்களை 12 இராசிகளாக சூரிய குடும்பத்தை சுற்றியுள்ள 12 நட்சத்திர கூட்டங்களின் பெயர்களால் குறிப்பிட்டார்கள். அதில் சூரியன் மேச ராசியில் உச்சத்தை அடைவதால் ராசி கட்டங்களில் அது முதல் ராசியாக உலகமெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த மேஷ ராசியில் சூரியன் நுழையும் நாளையே தமிழ் புத்தாண்டாகவும் சித்திரையை முதல் மாதமாகவும் நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்து காலம் காலமாக கொண்டாடி வருகிறார்கள். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் எந்த ராசி கட்டத்தில் உள்ளதோ அதை வைத்து ஒருவரின் பிறந்த தமிழ் மாதத்தை கூறமுடியும்........அதே நேரத்தில் தைமாதம் என்பது சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் நாள். அன்று தமிழ் நாட்டில் தைப்பொங்கலாகவும் மற்ற பகுதிகளில் மகர சங்கராந்தியாகவும் கேரள ஐயப்பன் கோவிலில் ஶ்ரீஐயப்பன் ஐோதி வடிவில் காட்சி தரும் மகர ஐோதியும் கொண்டாடப்படுகின்றன. மேலும் அன்று சூரியன் தனது தென்திசை பயணத்தை முடித்துக்கொண்டு வடக்கை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் (உத்ராயண காலம் தை-ஆனி) நாள். இந்த நாளுக்காகத்தான் மகாபாரதத்தில் பீஷ்மர் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தார். நம் புராணங்களின்படி பூமியில் ஒரு வருடம் என்பது தேவலோகத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நாள். அதில் தை முதல் ஆனி வரை பகலாகவும் (உத்ராயணம் - சூரியன் வடதிசை பயணம்), ஆடி முதல் மார்கழி வரை இரவாகவும் (தட்சிணாயனம் - சூரியன் தென்திசை பயணம்) கருதப்படுகிறது.......ஆகவே தையும் சித்திரையும் வெவ்வேறு காரணங்களுக்காக சிறப்பு பெறுகின்றன.......அரசாங்கத்திற்கு இதில் மாற்றம் செய்யவோ தலையிடவோ உரிமை இல்லை. தமிழும் தமிழ் பண்டிகைகளும் என்ன கருணாநிதி வீட்டு குடும்பச் சொத்தா? தங்கள் இஷ்டப்படி மாற்றிக்கொள்ள. இவர்கள் மற்ற மதங்களின் நம்பிக்கைகளிலும் உரிமைகளிலும் தலையிடுவார்களா? மாட்டார்கள். அதே நிலையை தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசு, காலம் காலமாக உள்ள மக்களின் நம்பிக்கைகளிலும் இந்த இந்திய திருநாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலும் கடைப்பிடிப்பதே அனைவருக்கும், அவர்களின் எதிர்காலத்திற்கும் நல்லது.
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
04-டிச-202110:36:39 IST Report Abuse
R MURALIDHARANஅருமையான விளக்கம். மதச்சார்பற்ற அரசுக்கு இந்துக்கள் பண்டிகையில் தலையிட என்ன உரிமை இருக்கிறது? கிறிஸ்து பிறந்தநாளை பற்றி சொல்லியுளீர்கள். நான் ஒரு செய்தியில் படித்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்த்மஸ் இரண்டு நாட்களில் உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டது. பிறகு பொதுவாக டிசம்பர் இருபத்தி ஐந்தை தீர்மானித்தார்கள் என்று....
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
01-டிச-202120:20:13 IST Report Abuse
S Bala சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாளில் இருந்து ஒரு ஆண்டு கணக்கிடப்படுகிறது. அதை ஏன் இவர்கள் மாற்ற முயற்சி செய்ய வேண்டும்? ஒரு வேளை ராமசாமி அல்லது அண்ணாதுரை அல்லது கருணாநிதி பிறந்த நாளை புத்தாண்டாக ஆக்கிவிடுவார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X