பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் ஓமலூர் அருகே ரூ.1,000 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சேலம்: தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 1,000 கோடி ரூபாய் சொத்துக்கள், அதிகாரிகள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே, பாகல்பட்டி சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, பல்வேறு பகுதிகளில் இருந்த சொத்துக்கள், தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சேலம் திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன், மீட்க கோரி
சேலம், ஓமலூர்,கோவில், நிலம், ஆக்கிரமிப்பு

சேலம்: தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 1,000 கோடி ரூபாய் சொத்துக்கள், அதிகாரிகள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே, பாகல்பட்டி சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, பல்வேறு பகுதிகளில் இருந்த சொத்துக்கள், தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சேலம் திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன், மீட்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தார். நடவடிக்கை இல்லாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இவ்வழக்கில், பல துறை அதிகாரிகள் குழு அமைத்து, கூட்டாய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, வருவாய், நில அளவை, பத்திரப்பதிவு மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு மூன்று நாட்களாக, பாகல்பட்டி, செல்லப்பிள்ளைகுட்டை, வெள்ளக்கல்பட்டி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.


latest tamil news




இது குறித்து, திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:ஆய்வில், 81 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையோரம் முக்கிய பகுதிகளில் உள்ளன. இதன் மதிப்பு, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமானது.இவற்றில் பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.கோவில் சொத்துக்களை பொறுத்தவரை, 100 ஆண்டுகள் பயன்படுத்தி வந்தாலும், அதற்கு யாரும் உரிமை கோர முடியாது. இதுபோல தமிழகம் முழுதும், 10 லட்சம் ஏக்கர்கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-டிச-202122:25:53 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நெத்தியில பட்டையை போட்டு, கழுத்திலே கொட்டையை போட்டு, கோவில் சொத்தை ஆட்டையை போடுறது வேற யாருமில்லை. சாட்சாத் பக்தால்ஸ் தான்.. சென்னையில் பார்த்தசாரதி, மைலாப்பூர் கோவில்களை, ஸ்ரீரங்கத்தில் கோவிலை சுத்தி பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஆக்கிரமித்து ஆட்டையை போட்டு அனுபவிச்சிக்கிட்டு இருக்குறவா வேற யாருமில்லை.. எல்லாம் அவா கூட்டம் தான்.. மத்தவாளும் இருக்கா.. 99% எல்லாமே இந்துக்கள் தான்.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
01-டிச-202120:18:44 IST Report Abuse
Priyan Vadanad கோவில் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் கயவர்களை, அதற்கு துணைபோன கயவர்களை கைது செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள நிறுவனங்களை கோவிலுக்கு சொந்தமாக்கி அவைகளை கோவில் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் விடவேண்டும்.
Rate this:
Cancel
Karuppiah - ????????,இந்தியா
01-டிச-202116:51:01 IST Report Abuse
Karuppiah அட பாவிகளா கோவில் சொத்து குல நாசம் டா இத்து போன பிறவிகல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X